முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விண்வெளியில் விவசாயம்!: பூமிக்கு வெளியே பச்சை மிளகாய் விளைவித்து சாதனை படைத்தது நாசா.!!

வெள்ளிக்கிழமை, 23 ஜூலை 2021      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன்: பூமியை தாண்டி புவிசூழலில் இருந்து முற்றிலும் மாறுபட்ட யாதுமில்லா விண்வெளியில் பயிரை வளர்த்து சாதித்துள்ளது அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா. சூரிய குடும்பத்தின் பிற கோள்களில் குடியேறும் முயற்சியின் ஒரு பகுதியாக பூமிக்கு வெளியே பயிர்களை வளர்க்க முடியுமா என்று சிந்தித்த நாசா, சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் மிளகாயை பயிரிட்டு பரிட்சித்து பார்க்க முடிவு செய்தது. இதற்காக நாசா பிரத்யேகமாக Advanced Plant Habitat என்ற இன்குபேட்டர் போன்ற சாதனத்தையும் தயாரித்தது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள இந்த சாதனம் பூமியில் உள்ளதை போன்றே மிளகாய் வளர்வதற்கு சாதகமான நீர், உரம், ஒளி, வெப்பம் போன்றவற்றை தருகிறது. 

Advanced Plant Habitat சாதனத்தில் களிமண் கலவையால் உருவாக்கப்பட்ட தளத்தில் தூவப்பட்ட மிளகாய் விதைகள் வளர்வதற்கு சாதகமான சூழல் கிடைத்தவுடன் மெதுவாக வளர தொடங்கின. மிளகாய் செடியின் வளர்ச்சியை 180 சென்சார்கள் கண்காணித்து தேவைக்கேற்ப நீர், உரம், ஒளி, வெப்பம் போன்றவற்றை அளித்தனர். இதனால் சர்வதேச விண்வெளி மையத்தில் செழித்து வளர்த்த மிளகாய் செடிகள், 4 மாதங்களில் அறுவடைக்கு தயாராக உள்ளன. இதுகுறித்து ஆராய்ச்சியாளர் தெரிவித்ததாவது, விண்வெளி நிலையத்தில் காரமான மிளகாயை தயாரித்துள்ளோம். மிளகாயின் நிறம் மற்றும் காரத்தன்மையை இந்த பயிரை தேர்வு செய்ததற்கான முக்கிய காரணமாகும் என்று குறிப்பிட்டுள்ளது. 

நாசாவின் அனுமதி கிடைத்ததும் இந்த மிளகாய் செடிகளை விண்வெளி வீரர்கள் அறுவடை செய்வார்கள். அவர்கள் பயன்படுத்தியது போக எஞ்சிய மிளகாய்கள் பூமிக்கு அனுப்பி வைக்கப்படும். இதன் மூலம் விண்வெளியில் விளைந்த மிளகாய்க்கும், பூமியில் அறுவடை செய்த மிளகாய்க்கும் ஏதேனும் வேறுபாடு இருக்கிறதா என்று ஆய்வு செய்ய நாசா திட்டமிட்டுள்ளது. பூமியை தாண்டி பிற கோள்களையும் காலனியாக துடிக்கும் மனித இனத்தின் ஆராய்ச்சியில் இது முக்கிய மைல் கல்லாக கருதப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக காய்கறிகள், பழங்களை விண்வெளியில் விளைவிக்கவும் நாசா திட்டமிட்டுள்ளது. அதன் முடிவு சாதகமாக அமைந்தால் செவ்வாய் உள்ளிட்ட பிற கோள்களில் குடியேற முனையும் மனித இனத்திற்கு சர்வதேச விண்வெளி நிலையம் பயணத்திற்கு நடுவே இளைப்பாறும் இடமாக மாறும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து