திருப்பதி கோவிலை பாதுகாக்க டிரோன் தடுப்பு தொழில்நுட்பம்

Tirupati 2021 07 23

Source: provided

திருப்பதி: புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலை பாதுகாக்க 25 கோடி ரூபாய் செலவில் டிரோன் தடுப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

ஜம்முவில் உள்ள விமான படைத்தளத்தில் கடந்த மாதம் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து நாடு முழுவதும் முக்கிய இடங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களுக்கான கண்காணிப்பை தீவிரப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஒரு டிரோன் தடுப்பு தொழில்நுட்ப அமைப்பை உருவாக்க 25 கோடி ரூபாய் வரை செலவு பிடிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலை பாதுகாக்க 25 கோடி ரூபாய் செலவில் டிரோன் தடுப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து