டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு பிரதமர் மோடி, ராகுல், மு.க. ஸ்டாலின் வாழ்த்து

Mirabai-Sanu 2021 07 24 0

Source: provided

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் வெள்ளி பதக்கத்தை வென்ற மீராபாய்க்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், டோக்கியோ ஒலிம்பிக்கில் இதை விட மகிழ்ச்சியான தொடக்கத்தைக் கேட்டிருக்க முடியாது. மீராபாயின் அற்புதமான செயல் திறனைக் கண்டு இந்தியா மகிழ்ச்சி அடைகிறது. அவரது வெற்றி அனைத்து இந்தியர்களுக்கும் ஓர் உத்வேகம் என்று பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், ஒலிம்பிக்கின் முதல் நாளிலேயே இந்தியாவுக்குப் பதக்கம் வென்று தந்த மீராபாய்க்கு வாழ்த்துகள். தனது மகளால் இந்தியா பெருமை கொள்கிறது என்று பதிவிட்டுள்ளார். 

தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், ஒலிம்பிக்கின் முதல் நாளிலேயே இந்தியாவுக்கு ஒரு பிரகாசமான ஆரம்பம். எனது மனமார்ந்த வாழ்த்துகள் மீராபாய் சானு. பளுதூக்கலில் தனது சிறப்பான செயல்பாட்டின் மூலம் முதல் வெள்ளிப் பதக்கத்தைக் கொண்டு வந்திருக்கிறார் என்று பதிவிட்டுள்ளார்.

இந்த வெற்றி குறித்து ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற விளையாட்டு வீரரான அபினவ் பிந்த்ரா, டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக முதல் பதக்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு வாழ்த்துகள். மிகவும் உற்சாகம் அளிக்கக்கூடிய இந்த சம்பவம் இன்னும் பல தலைமுறைகளுக்கு நினைவுகூரப்படும் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து