ஆகஸ்ட் 2-ல் தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படம் திறப்பு: சபாநாயகர்

Appav 2021 07 24

Source: provided

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 2-ம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படத்தை ஜனாதிபதி  ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்க உள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 2-ஆம் தேதி முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி உருவப்படத்தை மாலை 5 மணிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்கிறார். படத்திறப்பு விழாவுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்குகிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார். தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவிலும் ஜனாதிபதி பங்கேற்கிறார். நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கட்சி பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படும். விழாவுக்கான ஏற்பாடு சட்டப் பேரவைச் செயலகத்தினால் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். 

முன்னதாக டெல்லியில் பயணம் மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையில் கலைஞர் கருணாநிதி உருவப்படத்தை திறந்து வைக்க ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து