சிறையில் முதல் வகுப்பு கேட்ட சிவசங்கர் பாபா மனு தள்ளுபடி: செங்கல்பட்டு நீதிமன்றம் அதிரடி

Sivashankar-Baba 2021 07 24

Source: provided

செங்கல்பட்டு : சென்னையை அடுத்த கேளம்பாக்கம் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளி தாளாளர் சிவசங்கர் பாபா மீது மாணவிகள் அளித்த பாலியல் புகாரின்பேரில், அவர் மீது 2 போக்சோ உள்ளிட்ட 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவரை கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர்.

பள்ளி ஆசிரியர்கள் மற்றும் இதில் தொடர்பு உடையவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபா நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி அவரது வழக்கறிஞர்கள் மூலம் மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த செங்கல்பட்டு மகிளா நீதிமன்ற நீதிபதி, பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். 

இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவசங்கர் பாபா பள்ளியின் தாளாளராக இருந்தவர், அதனால் அவருக்கு சிறையில் முதல் வகுப்பு வழங்க வேண்டும் என செங்கல்பட்டு கோர்ட்டில் அவரது வழக்கறிஞர்கள் மனுதாக்கல் செய்தனர். இந்த வழக்கு நேற்று நீதிபதி தமிழரசி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த அவர், சிவசங்கர் பாபாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து