ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்: மனஅழுத்தத்தால் அமெரிக்க வீராங்கனை சிமோன் விலகல்

Simone-Biles 2021 07 28

Source: provided

டோக்கியோ : கொரோனா அச்சுறுத்தலுக்கிடையே ஒலிம்பிக்கில் பங்கேற்று வந்த நிலையில், மனஅழுத்தம் காரணமாக சிமோன் பைல்ஸ் இறுதிப் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

கொரோனா தொற்று... 

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஒருபக்கம் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தி வருகிறது. ஒலிம்பிக் கிராமத்தில் உள்ள பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. என்றாலும் மறுபக்கம் நாட்டிற்கு பெருமை சேர்ப்பதற்காக வீரர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். 

இறுதிக்கு முன்னேற்றம்...

அமெரிக்காவின் முன்னணி ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சிமோன் பைல்ஸ். இவர் பெண்களுக்கான ஆல்-ரவுண்ட் பிரிவில் சக வீராங்கனைகள் மூன்று பேருடன் தகுதிச்சுற்றில் கலந்து கொண்டார்.அமெரிக்க அணி தகுதிச்சுற்றில் சிறப்பாக செயல்பட்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 

திடீரென விலகல்...

இறுதிப்போட்டி இன்று நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் அமெரிக்க அணியில் இடம் பிடித்திருந்த சிமோன் பைல்ஸ் திடீரென இறுதிப்போட்டியில் பங்கேற்கமாட்டேன் எனத்தெரிவித்துள்ளார். மனஅழுத்தம் காரணமாக ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள நிலையில், அமெரிக்க ஜிம்னாஸ்டிக் அசோசியேசன் சிமோன் முடிவை உறுதி செய்துள்ளது. தகுதிச்சுற்றில் தனிப்பட்ட முறையில் முதல் இடம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து