ஆப்கன் மண்ணை சீனாவுக்கு எதிராகப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்: தலிபான்கள் உறுதி

Taliban--2021-07-29

ஆப்கன் மண்ணை சீனாவுக்கு எதிராகப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

தலிபான்களுடன் ஆப்கன் அதிபர் அஷ்ரப் கானி தீவிரப் பேச்சுவார்த்தை நடத்த முயன்றுவந்த நிலையில், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீயை தலிபான்கள் சந்தித்தனர்.

ஆப்கானிஸ்தானின் தற்போதையை நிலை குறித்தும், அமைதி, அரசியல், பொருளாதாரம் ஆகியவை குறித்தும் இந்தச் சந்திப்பில் பேசப்பட்டன. இரு நாட்டு உறவு குறித்தும் பேசப்பட்டது.

இந்த நிலையில் சீன வெளியுறவுத் துறை அமைச்சரிடம் ஆப்கன் நிலத்தை சீனாவுக்கு எதிராகப் பயன்படுத்த விடமாட்டோம் என்று தலிபான்கள் உறுதி அளித்ததாகவும், ஆப்கன் விவகாரத்தில் சீனா தலையிடாது என்றும், நாட்டில் அமைதியை ஏற்படுத்த சீனா உதவும் என்றும் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் உறுதியளித்திருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா, நேட்டோ படைகள் வெளியேற்றத்துக்குப் பிறகு, இராக், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய எல்லையோரப் பகுதிகளை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து