முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிப்ரவரியில் பொறியியல் மேற்படிப்புக்கான கேட் 2022 தேர்வு: 2 புதிய தாள்கள் அறிமுகம்

வியாழக்கிழமை, 29 ஜூலை 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி: மத்தியக் கல்வி நிறுவனங்களில் பொறியியல் மேற்படிப்புகளுக்காக நடத்தப்படும் நுழைவுத் தேர்வான கேட் 2022 தேர்வு, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வில் புதிதாக 2 தாள்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

ஐ.ஐ.டி., ஐ.ஐ.எஸ்.சி. உள்ளிட்ட மத்திய அரசின் தேசிய உயர் கல்வி நிறுவனங்களில் எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் உள்ளிட்ட பட்ட மேற்படிப்புகளில் சேர்வதற்கு கேட் (Graduate Aptitude Test in Engineering) என்ற நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.

ஆண்டுதோறும் கேட் நுழைவுத்தேர்வை சென்னை, டெல்லி உள்ளிட்ட 7 ஐ.ஐ.டி. நிறுவனங்களில் ஏதேனும் ஒன்று அல்லது பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம் நடத்தும். இந்த ஆண்டு கேட் தேர்வை ஐ.ஐ.டி. காரக்பூர் நடத்துகிறது.

இதுகுறித்து ஐ.ஐ.டி. காரக்பூர் இயக்குநர் வி.கே.திவாரி கூறும்போது, ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் மாணவர் சேர்க்கைக்கான கேட் நுழைவுத்தேர்வு பிப்ரவரி மாதத்தில் பல்வேறு கட்டங்களாக நடைபெறும். அந்த வகையில் 2022-23ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கேட் நுழைவுத் தேர்வு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது. பிப்ரவரி 5, 6, 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெறும்.

மொத்தம் 100 மதிப்பெண்களைக் கொண்ட இத்தேர்வு சிவில், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், ஏரோ ஸ்பேஸ் உட்பட 27 பாடப் பிரிவுகளில் நடத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் புதிதாக புவிசார் பொறியியல் - GE (Geomatics Engineering) மற்றும் கடற்படை கட்டிடக்கலை மற்றும் கடல்சார் பொறியியல் - NM (Naval Architecture and Marine Engineering) ஆகிய 2 தாள்கள் தேர்வில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இத்தகைய துறைகளில் தேசத்துக்கு நிபுணத்துவம் பெற்றவர்கள் தேவைப்படும் நிலையில், புதிய தேர்வுகள் நிச்சயம் பலன் அளிக்கும். இதன் மூலம் 2022-ம் ஆண்டில் மொத்தம் 29 பாடப்பிரிவுகளில் கேட் தேர்வு நடைபெற உள்ளது. பி.டி.எஸ். மற்றும் எம்ஃ.பார்ம். படிப்பு படித்தவர்களும் கேட் தேர்வை எழுதலாம் என்று வி.கே.திவாரி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து