தமிழகத்தில் தொடர்ந்து பாதிப்பு அதிகரிப்பு: புதிதாக 1,986 பேருக்கு கொரோனா

Vaccine 2021 07 26

Source: provided

சென்னை : தமிழகத்தில் நேற்று 1,986- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்றைய  கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் நேற்று 1,986- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 25,59 ஆயிரத்து 597- ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 2,178-பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  நேற்று ஒரே நாளில் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.  தொற்று பாதிப்பைக் கண்டறிய ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 171- மாதிரிகள் நேற்று  பரிசோதிக்கப்பட்டுள்ளன.  சென்னையில் நேற்று 204- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 20,716- ஆக உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து