ஏவுகணை தாக்குதலில் இருந்து போர் விமானங்களை காக்கும் அதிநவீன தொழில்நுட்பம்: டி.ஆர்.டி.ஓ., உருவாக்கம்

Fighter-planes 2021 08 20

இந்திய விமானப் படைக்குச் சொந்தமான போர் விமானங்களை எதிரி நாட்டு ஏவுகணை தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் வகையில், அதிநவீன சாப் தொழில்நுட்பத்தை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.,) உருவாக்கியுள்ளது.

இதுகுறித்து டி.ஆர்.டி.ஓ., வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, 

ஜோத்பூர் மற்றும் புனேயில் உள்ள டி.ஆர்.டி.ஓ., ஆய்வகங்கள் இணைந்து உருவாக்கியுள்ள இந்த நவீன தொழில்நுட்பம், போர் விமானத்தில் பொருத்தும் வகையிலான சாப் கேட்ரிட்ஜ் - 118/ஐ என்ற கருவி உருவாக்கப்பட்டு உள்ளது. அதில், சிறு அலுமினியம் அல்லது துத்தநாகம் பூசப்பட்ட நார்த் துகள்கள் லட்சக்கணக்கில் அடைக்கப்பட்டிருக்கும். போர் விமானம் பறந்து கொண்டிருக்கும் போது, இந்தத் துகள்களை வெளியேற்றி காற்றில் பறக்க விடுவதன் மூலம், தாக்க வரும் எதிரி நாட்டு ஏவுகணையை ரேடார் உதவியுடன் திசை திருப்ப முடியும். அதன் மூலம் போர் விமானத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தொழில் நுட்பத்தை உள்நாட்டிலேயே உருவாக்கி உள்ளது குறித்து, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்புத் தொழில்நுட்ப உருவாக்கத்தில் தற்சார்பு இந்தியா இலக்கை எட்டுவதில் டி.ஆர்.டி.ஓ., மேலும் ஒரு படி முன்னேறியுள்ளது என்று பாராட்டி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து