பொதுமக்கள் ஒத்துழைப்புடன் கட்டுக்குள் வந்தது கொரோனா ம.பி. முதல்வர் சவுகான் பெருமிதம்

Shivraj-Singh 2021 08 22

Source: provided

போபால்: மத்திய பிரதேசத்தில் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது என்று முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்து உள்ளார்.

மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 

பொதுமக்கள் ஒத்துழைப்புடன் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது.  எனினும், கொரோனா முற்றிலும் நீக்கப்படவில்லை. நாம் அச்சப்பட வேண்டாம்.  ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.  அனைவரும் கொரோனா வழிகாட்டு அணுகுமுறையை கடைப்பிடிக்கும்படி கேட்டு கொள்கிறேன் என தெரிவித்து உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து