முக்கிய செய்திகள்

பாரதியாரின் எண்ணங்கள் பல தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கும்: அமித்ஷா தமிழில் டுவீட்

சனிக்கிழமை, 11 செப்டம்பர் 2021      இந்தியா
Amit-Shah-2021-09-11

புகழ்பெற்ற இந்திய கவிஞர், எழுத்தாளர், சுதந்திர போராட்டவீரர் மகாகவி பாரதியாரின் 100-வது நினைவு தினத்தில் நான் அவரை வணங்குகிறேன் என மத்திய உள்துறை அமைச்சர் அமிஷா கூறியுள்ளார்.

நாடு முழுவதும் மகாகவி பாரதியாரின் 100-வது ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது டுவிட்டர் பதிவில், 

 

புகழ்பெற்ற இந்திய கவிஞர், எழுத்தாளர், சுதந்திர போராட்ட வீரர் மகாகவி பாரதியாரின் 100-வது நினைவு தினத்தில் நான் அவரை வணங்குகிறேன்! பாரதியாரின் பாடல்களால் ஈர்க்கப்பட்டு எண்ணற்ற மக்கள் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அவருடைய எண்ணங்கள் பல தலைமுறைகளுக்கு நமக்கு ஊக்கமளிக்கும் என பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து