முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகிலேயே முதல்முறையாக 2 வயது குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி கியூபா சாதனை

வெள்ளிக்கிழமை, 17 செப்டம்பர் 2021      உலகம்
Image Unavailable

2 வயது குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தி உலகிற்கு முன்னுதாரண நாடாகியுள்ளது கியூபா. மேலும், கியூபா அந்நாட்டு மக்களுக்கு சொந்தமாக தயாரிக்கப்பட்ட தடுப்பூசியையே செலுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனாவுக்கு எதிரான பேராயுதம் தடுப்பூசி. அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள். இந்த உலகில் ஒவ்வொருவரும் பாதுகாப்பானவராக மாறும் வரை ஒருவருமே பாதுகாப்பானவர் இல்லை இது உலக சுகாதார மையம் அன்றாடம் உலக மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது.

இந்நிலையில், கியூபாவில் 2 வயது முதல் 10 வயதுடைய குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸ் பலவகையாக உருமாறி தற்போது டெல்டா வைரஸ் உலக நாடுகளுக்கு பெரும் சவாலாக இருக்கிறது. இந்நிலையில், கியூப தலைநகர் ஹவானாவில் உள்ள அரசு மருத்துவமனையின் காட்சிகள் நம்பிக்கை அளிப்பதாக அமைந்துள்ளன. 

கியூபாவில் வியாழக்கிழமை தான் 2 வயது முதல் 10 வயதிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. உலகிலேயே கியூபா தான் முதன்முறையாக இவ்வளவு சிறிய வயதிலான குழந்தைகளுக்குக் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்கிறது.

இது குறித்து கியூப நாட்டின் வெடாடோ பாலிகிளினிக் பல்கலைக்கழகத்தின் இயக்குநர் ஆரோலிஸ் ஒடேனோ கூறுகையில், தடுப்பூசி பாதுகாப்பானது இல்லையென்றால் நாங்கள் எங்களின் குழந்தைகளின் உயிரைப் பணையம் வைப்போமா? என்று கேள்வி எழுப்பினார். டெல்டா வைரஸால் நாட்டில் இளம் வயதினர் அதிகம் பாதிக்கப்படத் தொடங்கியிருக்கின்றனர். அதனாலேயே கியூபா குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி திட்டத்தை முழுவீச்சில் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து