செஞ்சி அருகே ஊராட்சி மன்ற தலைவர் பதவி ரூ.13 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டதாக புகார்: மாவட்ட கலெக்டர் நேரில் விசாரணை

Election 2021 09 15

Source: provided

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 13 லட்சம் ரூபாய்க்கு ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஏலம் விடப்பட்டதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக மாவட்ட கலெக்டர் நேரில் விசாரணை  நடத்தியுள்ளார். 

செஞ்சி வட்டத்திற்கு உட்பட்ட பொன்னங்குப்பம் கிராமத்தை சேர்ந்த மக்கள் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். பொன்னங்குப்பம் ஊராட்சியில் தலைவர் பதவி பட்டியல் சமூகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு 1,400 வாக்குகள் உள்ளன. ஆனால் இதன் துணைக் கிரமமான துத்திப்பட்டு கிராமத்தில் 2,400 வாக்குகள் உள்ளன. இதனால் துத்திப்பட்டு கிராமத்தினர் தங்களுக்குள்ளேயே ஒரு நபரை தேர்வு செய்து அவரிடம் 13 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

எனவே பொன்னங்குப்பத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க தவறினால் தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார். இதனிடையே திண்டிவனம் அடுத்துள்ள நெடிமொழியனூர் ஊராட்சியில் இருந்து நெடி கிராமத்தை சேர்ந்த தனி பஞ்சாயத்திற்காக அறிவிக்க வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வெளங்கம்பாடி, பாலப்பட்டு போன்ற 500-க்கும் குறைவான வாக்குகள் உள்ள கிராமங்கள் தனி பஞ்சாயத்திற்காக இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து