முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பை வெற்றி பெறும்: ஆகாஷ் சோப்ரா கணிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 19 செப்டம்பர் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

துபாய்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெறும் என கணித்துள்ளார் ஆகாஷ் சோப்ரா. 

பெரும் எதிர்பார்ப்பு... 

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தள்ளிவைக்கப்பட்ட நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடரின் எஞ்சிய போட்டிகள், ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று முதல் மீண்டும் தொடங்கின. முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

மும்பை அணிக்கு...

இந்நிலையில் முதல் ஆட்டத்தில் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, எம்.எஸ். டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெறும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார். மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர்களை விட விரல் சுழற்பந்து வீச்சாளர்கள் அதிக விக்கெட்டுகளை வீழ்த்துவார்கள் என்றும் குறிப்பாக மொயீன் அலி மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் அதிக விக்கெட்டுகள் எடுப்பார்கள் என்றும் அவர் குறிப்பிடுள்ளார்.

பவுலர்களுக்கு...  

மேலும் கூறிய ஆகாஷ் சோப்ரா, ''துபாய் ஆடுகளம் பவுலர்களுக்கு சாதகமாக இருக்கும். முதல் நான்கு ஓவர்களுக்குள் நிச்சயம் ஒரு விக்கெட் விழும். 2 விக்கெட்டுகள் கூட விழலாம்'' என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து