முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்பெயின் லா பால்மா தீவில் வெடித்து சிதறிய எரிமலைக் குழம்பு: ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்

திங்கட்கிழமை, 20 செப்டம்பர் 2021      உலகம்
Image Unavailable

ஸ்பெயின் நாட்டின் லா  பால்மா தீவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பை அடுத்து எரிமலைக் குழம்பு வீடுகளுக்குள் புகுந்தது. பாதுகாப்பு கருதி 500 சுற்றுலாப் பயணிகள் உட்பட 5000 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.  எரிமலை வெடிப்பு காரணமாக கரும்புகை அப்பகுதியை சூழ்ந்துள்ளதாக விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஸ்பெயின் நாட்டின் கனேரி தீவு பகுதிகளில் பெரியது முதல் சிறியதாக 8 தீவுகள் அமைந்துள்ளன. டெனெர்ஃப், ஃபியூர்டெவென்ச்சுரா, கிரான் கனேரியா, லான்சரோட், லா பால்மா, லா கோமரா, எல் ஹியரோ மற்றும் லா கிராசியோசா ஆகியவையே அவை.

லா பால்மா தீவில் சுமார் 85 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அங்குள்ள எரிமலை ஒன்று வெடித்து சிதறியது. இதன் காரணமாக அப்பகுதியே கரும்புகை சூழ்ந்து காட்சியளிக்கிறது. எரிமலையில் இருந்து வெளியேறும் லாவா சாலைகளிலும் காடுகளிலும் பரந்து விரிந்து காணப்படுகிறது.

 

கனேரி தீவுகளில் கடந்த 50 ஆண்டுகளில் நிகழும் முதல் எரிமலை வெடிப்பு இது என்று கூறப்படுகிறது. தீக்குழம்பு முன் எதிர்படும் வீடுகள் உள்ளிட்ட கட்டுமான பொருட்களும் தீக்கிரையாகி வருகின்றன. இதுவரை 100 வீடுகள் தீக் குழம்புக்கு இரையாகியுள்ளன. பாதுகாப்பு கருதி 500 சுற்றுலாப் பயணிகள் உட்பட 5000 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து