திருப்பதியில் பக்தர்களிடம் மோசடி: 2 பேர் கைது

Tirupati 2021 09 20

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க போதிய டிக்கெட்டுகள் கிடைக்காமல் சாதாரண பக்தர்கள் அலை மோதுகின்றனர். மேலும் இடைத்தரகர்களிடம் சிக்கி ஏமாற்றம் அடைகின்றனர்.

 

இதுபோல் திருப்பதி வந்த தெலங்கானா மாநிலம், புவனகிரி பகுதியை சேர்ந்த 11 பக்தர்களுக்கு தரிசன டிக்கெட் வாங்கி தருவதற்காக ரூ. 16,000 பேரம் பேசி, முன்பணமாக ரூ. 8,000 வாங்கியுள்ளனர். அவர்களில் ஒருவரது செல்போனில் தரிசனத்துக்கான குறுந்தகவல் வந்துள்ளது. அதில் குறிப்பிட்டிருந்த நேரத்தில் சென்ற போது, அங்கு இவர்களை அனுமதிக்கவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த புவனகிரி பக்தர்கள் திருமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில், போலீஸார் வழக்கு பதிவு திருப்பதியை சேர்ந்த இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து