விஜய்க்கும் எனக்கும் பிரச்சினை இருப்பது உண்மைதான் : எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம்

SA-Chandrasekhar 2021 09 28

நடிகர் விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திர சேகர் வீடியோ ஒன்று வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

எனக்கும் விஜய்க்கும் பிரச்சினை உள்ளது உண்மைதான் நான் அதை மறுக்கவில்லை. விஜய்க்கும் அவரது தாய் ஷோபாவிற்கும் இடையில் எந்த மனக் கசப்பும் இல்லை. 

சமீபத்தில் வார இதழ் ஒன்றில் வெளிவந்த தகவல்கள் உண்மையில்லை என கூறி உள்ளார்.  தனது மகன் விஜய்யுடனான அவரது உறவை மேலும் மோசமாக்கும் சாத்தியம் கொண்ட அந்த செய்தியை மறுத்தார். சமீபத்தில் அவரிடம்  பேட்டி எடுத்த ஒரு தமிழ் வார இதழ் தவறான தகவல்களை வெளியிட்டு உள்ளதாக கூறினார். 

அந்த பேட்டியில்  நான் சொல்லாத ஒன்று இருந்தது. அதில் ஷோபாவும் நானும் விஜய்யின் வீட்டிற்கு வெளியே காத்திருக்கும்படி  கூறப்பட்டோம் விஜய் ஷோபாவை மட்டும் உள்ளே வரச் சொன்னார், அதன் காரணமாக நானும் ஷோபாவும் (அவரை சந்திக்காமல்) திரும்பினோம் என கூறி இருப்பது உண்மை இல்லை என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். 

 

ஆம், எனக்கும் விஜய்க்கும் பிரச்சினைகள் உள்ளன. ஆனால், விஜய் மற்றும் ஷோபா இடையே எந்த கசப்பும் இல்லை. இருவரும் அடிக்கடி பேசுவார்கள், சந்திக்கிறார்கள். அவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக உள்ளனர், ”என்று சந்திரசேகர்  வீடியோவில் கூறி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து