முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜேம்ஸ் கிரண்ஜி இயக்கும் அந்தகார சூரன்

ஞாயிற்றுக்கிழமை, 3 அக்டோபர் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

அந்தகாரசூரன் என்பது சமஸ்கிருத வார்த்தை, இருளின்  ராஜா என்பது அதன் பொருள். இப்படம் ஹாரர் காமெடியுடன் சைக்கோ திரில்லராக உருவாக்கப்பட்டிருக்கிறது.

தான் விரும்பிய ஒன்றை அடைய,  எதையும் செய்யலாம் என நினைக்கும் ஒரு சைக்கோ மனிதனின் கதை தான் இந்த படம். முற்றிலும் புது முகங்கள் நடித்துள்ள இப்படத்தில் மூன்று பெண்கள் இரண்டு ஆண்கள் மட்டுமே நடித்துள்ளனர்.

தமிழ்,தெலுங்கு, கன்னடம்  என மூன்று மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் முழுக்க சென்னை ஈசிஆர் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. ரியாஸ், மனோஜ், ஜேம்ஸ் கிரண், ஆஷிகா, ஜெனிஃபர் ரேச்சல், பூஜா ஷர்மா ஆகியோர் முக்கிய கதாப்பத்திரங்களில் நடிக்க, ஜேம்ஸ் கிரண்ஜி இயக்கியுள்ள இப்படத்திற்கு வசனம் மற்றும் பாடல்கள் வி சசிக்குமார். இசை செந்தமிழ்,  படத்தொகுப்பு கௌதம், ஒளிப்பதிவு பிரசாந்த் கௌடா அனைத்தும் முடிந்த நிலையில் ஓடிடியில் கிறிஸ்துமஸ் வெளியீடாக வரவுள்ளதாக தயாரிப்புக்குழு அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து