முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லக்கிம்பூர் சம்பவம் தொடர்பாக பிரசாந்த் கிஷோர் போட்ட ட்வீட்: ஆடிப்போன காங்கிரஸ்

வெள்ளிக்கிழமை, 8 அக்டோபர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து செயல்படும் தேர்தல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் லக்கிம்பூர் விவசாயிகள் பலியான சம்பவத்தையடுத்தே மக்கள் காங்கிரஸ் கட்சி தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர வேண்டும் என்று எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் பிரசாந்த் கிஷோருக்கு பெரிய பொறுப்பு வழங்கப்படுவதாக உள்ளது, இதற்கு கட்சியில் எதிர்ப்பும் ஆதரவுமாக கலவையான எதிர்வினைகள் இருந்து வரும் சூழ்நிலையில் லக்கிம்பூர் சம்பவத்துக்குப் பிறகு பாஜக செல்வாக்கு சரிகிறது, என்ற கோணத்தில் இந்தச் சம்பவத்திற்குப் பிறகே பழம்பெரும் கட்சியான காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ஆனால் பழம்பெரும் கட்சி உடனடியாக எழும்புவது கடினம் என்கிற தொனியில் பிரசாந்த் கிஷோர், தன் ட்விட்டர் பக்கத்தில், “லக்கிம்பூர் சம்பவத்துக்குப்பிறகே எதிர்க்கட்சிகள் பழம்பெரும் கட்சியின் தலைமையில் விரைவாக, தானாக மீண்டெழ வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். மக்கள் இதை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

பழம்பெரும் கட்சி அமைப்பு ரீதியாகவும் ஆழமான பிரச்சனைகளாலும் பலவீனமாக உள்ளது. துரதிர்ஷ்டவசமாக இந்தப் பிரச்சனைகளை தீர்க்க தீர்வு எதுவும் கிடைக்கவில்லை என்று பதிவிட்டுள்ளார். கோவா காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான லூயிசினோ பெலேரோ கட்சியிலிருந்து விலகியது குறித்து பிரசாந்த் கிஷோர் அவரை திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் சேருமாறு அழைத்தது பெரிய சர்ச்சையை எழுப்பியது. இப்போது காங்கிரஸின் பிரச்சனைகளை ஆழமானது, தீர்வு இல்லை என்று கூறியிருக்கிறார். இதனால் காங்கிரஸ் கட்சி கொஞ்சம் கிடுகிடுத்துப் போயுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து