முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் மு.க.ஸ்டாலினின் பாதுகாப்பிற்கு செல்லும் கான்வாய் வாகனங்களின் எண்ணிக்கை குறைப்பு

சனிக்கிழமை, 9 அக்டோபர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் பாதுகாப்பிற்காக செல்லும் கான்வாய் வாகனங்களின் எண்ணிக்கை தற்போது 6 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 

சென்னை தலைமை செயலளகத்தில் நேற்று தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோர் அடங்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பொதுமக்களின் வாகனங்களை நிறுத்தாமல் மற்ற வாகனங்களுடன் சேர்ந்தே முதல்வரும் செல்லும் வகையில் ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டது.

மேலும், வழக்கமாக முதல்வரின் பாதுகாப்பிற்காக 12 முதல் 13 வாகனங்கள் செல்லும். அந்த வாகனங்களில் எண்ணிக்கை தற்போது ஆறாக குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்ற வகையில் இந்த முடிவு என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து