முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டாக்டர் - விமர்சனம்

செவ்வாய்க்கிழமை, 12 அக்டோபர் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

கோலமாவு கோகிலா படத்திற்குப் பிறகு நெல்சன் திலீப் குமார் இயக்கியிருக்கும் இரண்டாவது படம் இந்த டாக்டர். இசை அனிரூத், ஒளிப்பதிவு விஜய் கார்த்தி. ராணுவத்தில் பணியாற்றும் ஒரு மருத்துவர் சிவகார்த்திகேயன். இவருக்கு பிரியங்கா மோகன் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் திருமணம் செய்ய மறுத்து விடுகிறாள். இந்த நேரத்தில் பிரியங்காவின் அண்ணன் மகள் காணாமல் போக அந்தக் குழந்தையைத் தேடுவதில் அவர்களுக்கு உதவுகிறார் சிவகார்த்திகேயன்.

குழந்தையைக் கடத்தியது யார், எதற்காக, எப்படி மீட்கிறார்கள் என்பது மீதிக் கதை. ஒரு சீரியசான திரில்லர் படத்தைப் போலத் துவங்கினாலும், இது ஒரு பிளாக் காமெடி திரைப்படமே. கிட்டத்தட்ட கோலமாவு கோகிலாவைப் போலவே கதையோட்டம் உள்ளது. குழந்தை கடத்தல் என்ற தீவிரமான விஷயத்தை கையில் எடுத்து செம்ம நகைச்சுவையோடு நகர்த்திச் செல்கிறார் இயக்குனர்.  படம் நகர நகர யோகிபாபு, ரெடின் போன்ற கலகலப்பான கதாபாத்திரங்கள் கதையில் வந்து சேரும் போது,  ஓர் அக்மார்க் black comedy படமாக உருவெடுக்கிறது.

அதிலும், குழந்தைகளைப் போல கையைத் தட்டிவிட்டு விளையாடும் காட்சிகள் வயிறுவலிக்கச் சிரிக்கவைக்கின்றன. கதாநாயகி பிரியங்கா நன்றாகவே நடித்திருக்கிறார். அதேபோல, பணிப்பெண்ணாக வரும் தீபாவும் சில காட்சிகளில் பிரகாசிக்கிறார். அனிருத்தின் இசையில் படத்தின் இறுதியில் வரும் பாடல் சிறப்பாக இருக்கிறது.

ஆனால், ஆரம்பித்து அரை மணி நேரத்திற்குள் இரண்டு பாடல்களை வைத்திருப்பது சற்று அயர்ச்சியை ஏற்படுத்துகிறது. மொத்தத்தில் இந்த கொரோனா கால மன இறுக்கத்திலிருந்து விடுபட வேண்டுமானால், மருத்துமனைக்கு சென்று டாக்டரை பார்ப்பதற்கு பதில் தியேட்டருக்கு சென்று இந்த டாக்டரை பார்த்தால் இரண்டரை மணி நேரம் ஜாலியாக சிரித்துவிட்டு மகிழ்ச்சியாக வரலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!