முக்கிய செய்திகள்

சென்சார் பெற யோசனை சொல்லும் ஆதம்பாவா

செவ்வாய்க்கிழமை, 12 அக்டோபர் 2021      சினிமா
Adam-Bava 2021 10 12

Source: provided

ப்ளூ சட்டை மாறன் இயக்கத்தில் மூன் பிக்சர்ஸ் ஆதம்பாவா தயாரித்துள்ள படம் ஆன்டி இண்டியன். இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்துவிட்ட நிலையில், இந்தப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா  சமீபத்தில் நடைபெற்றது.

விழாவில் தயாரிப்பாளர் ஆதம் பாவா பேசும்போது,  இப்படம் பெரிய பட்ஜெட் படம் தான். சென்சார் சான்றிதழுக்கு விண்ணப்பிப்பவர்கள் தங்களது படத்திற்கு யு, யு/ஏ, ஏ என எந்த சான்றிதழ் பொருந்தும் என நீங்களே தீர்மானித்து அதற்கேற்ப சான்றிதழுக்கு விண்ணப்பித்தால் எந்த சிக்கலும் இன்றி எளிதாக கிடைத்து விடும்.

நாங்கள் யு சான்றிதழ் கேட்டதால் தான் இத்தனை சிக்கல்கள் எழுந்தது என்பதை பின்னர் தான் தெரிந்து கொண்டோம் என்றார். இயக்குநர் வேலு பிரபாகரன், நடிகர்கள் ஆடுகளம் நரேன், பசி சத்யா, விஜயா,  சண்டைப் பயிற்சியாளர் ஹரி தினேஷ், இணை இசையமைப்பாளர் வில்லியம்ஸ் உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து