முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரிப்பு

வியாழக்கிழமை, 21 அக்டோபர் 2021      இந்தியா
Image Unavailable

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று சற்று அதிகரித்து காணப்பட்டது.

கொரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு.,

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை தொடர்ந்து வீழ்ச்சிப்பாதையில் செல்கிறது. தினசரி பாதிப்பு தொடர்ந்து சரிவு அடைந்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,454- பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 17,561- பேர் குணம் அடைந்துள்ள நிலையில், 160- பேர் தொற்று பாதிப்புக்கு பலியாகியுள்ளனர். இந்தியாவில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,41,27,450 ஆக அதிகரித்துள்ளது. 

 

கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 78 ஆயிரத்து 831- ஆக உள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3,34,95,808 - ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்புக்கு இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4,52,811ஆக உயர்ந்துள்ளது.  நாட்டில் நேற்று ஒருநாளில் மட்டும் 48,08,665 கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து