முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சனிக்கிழமை, 23 அக்டோபர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : சென்னையில் கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசியைத் தகுதியுள்ள அனைவருக்கும் செலுத்தும் வகையில், தீவிர கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம் கடந்த வாரங்களில் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது. இதுவரை 5 கட்ட முகாம்கள் நடைபெற்றுள்ள நிலையில், 6-ம் கட்ட முகாம், நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. குறிப்பாக, சென்னையில் 1,200-க்கும் மேற்பட்ட மையங்களில் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டது. 

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஆறாவது தீவிர கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாமையொட்டி, சென்னை, ஒக்கியம் துரைப்பாக்கம், கண்ணகி நகரில் உள்ள அரசு இ-சேவை மையத்தில் உள்ள கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாமைப் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். பொதுமக்களிடம் தடுப்பூசி செலுத்திக்கொண்ட விவரங்கள் குறித்துக் கேட்டறிந்தார். மேலும், கண்ணகி நகரில் உள்ள நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனையில் கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாமைப் பார்வையிட்டு, பதிவேடுகளை ஆய்வு செய்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து