முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நவ. 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு: தமிழகத்தில் விடுதிகள் திறப்பு குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சனிக்கிழமை, 23 அக்டோபர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் நவம்பர் 1-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு விடுதிகளுக்கான  வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

நவம்பர் 1-ம் தேதியிலிருந்து 1 முதல் 8-ம் வகுப்பு மாணக்கர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் விடுதிகள் திறக்கப்பட உள்ளன. விடுதிகள் திறப்பிற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அவை வருமாறு.,

* அனைத்து விடுதிகளில் நுழைவு பகுதியில் 2 கிருமிநாசினி பாட்டில்கள் வைக்கப்பட்டிருக்க வேண்டும். பள்ளிகளில் இருந்து வரும் மாணவர்கள் கிருமிநாசினி கொண்டு கைகளை கழுவிய பின்னரே விடுதிக்குள் வருவதையும், விடுதியில் மாணவர்கள் சமூக இடைவெளியுடன் தங்கி கல்வி பயில்வதையும் காப்பாளர்கள் உறுதி செய்திடல் வேண்டும்.

* ஒவ்வொரு விடுதி நுழைவு வாயிலிலும் மாணவர்களுக்கு உடல் பரிசோதனை எடுத்து அதற்குரிய பதிவேடு ஏற்படுத்திபதிவு செய்யப்பட வேண்டும் இதனை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்கள் ஆய்வு செய்தல் வேண்டும்.

* தன் சுத்தம் மற்றும் பெருந்தொற்று தடுப்பு பாதுகாப்பு அணுகுமுறைகள் குறித்து தேவையான விழிப்புணர்வினை வழங்கிட வேண்டும்.

* விடுதி வளாகங்களை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதி செய்திடல் வேண்டும்.

* மழைக்காலங்களில் விடுதி வளாகத்தில் மழைநீர் தேங்காமல் இருப்பதையும், பள்ளங்கள் இல்லாமல் இருப்பதையும் உறுதி செய்திடல் வேண்டும். கொசுக்கள் உற்பத்தியாக வண்ணம் விடுதிகளில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் விடுதி வளாகத்தில் தேவையான பகுதிகளில் கொசு மருந்து தெளித்து விடுதி வளாகம் சுகாதாரமான சூழலில் செயல்படுவதை உறுதி செய்திடல் வேண்டும்.

* விடுதியில் உள்ள அனைத்து மின் சாதனங்களையும் நன்முறையில் பராமரித்து மழைக்காலங்களில் நீர் கசிவினால் மின் கசிவு ஏதும் ஏற்படாதவாறு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை உறுதி செய்திடல் வேண்டும்.

* விடுதி மாணவர்கள் அவசியமின்றி விடுதியிலிருந்து தங்கள் இல்லங்களுக்கு சென்று வருவதை தவிர்க்க வேண்டும். நீண்ட இடைவெளிக்கு பின்னர் மாணவர்கள் நேரடி வகுப்பில் பங்கு பெறுவதால் அவர்களை உளவியல் ரீதியாக தயார்படுத்தி இறுதியில் அணுகுவதற்கு தேவையான நடவடிக்கைகள் நேர்மறை சிந்தனைகள் மற்றும் வாழ்வியல் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள வாய்ப்புகள் ஏற்படுத்தவும் கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு நிகழ்ச்சிகளை காண உரிய ஆலோசனைகளை வழங்கி விடுதி சூழல் இனிமையானதாகவும் மகிழ்ச்சி நிறைந்ததாகவும் மாற்றப்படுவதை விடுதி காப்பாளர்கள் உறுதி செய்திடல் வேண்டும் .

* விடுதிப் பணியாளர்கள் அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி போடப் பட்டிருப்பதைப் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் உறுதிசெய்தல் வேண்டும் .

* விடுதியினை உயர் அலுவலர்கள் பார்வை இடுகையில் அனைத்து ஆவணங்களையும் அவர்களின் பார்வைக்கு சமர்ப்பிக்க காப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் விடுதிகளில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கை அடிப்படையில் ஒரு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாணாக்கர்களை தங்கி கல்வி பயில அனுமதிக்குமாறும் இவற்றை மீறி அதிகப்படியான மாணவர்களை எவ்விதத்திலும் அனுமதிப்பதை தவிர்த்திட வேண்டும் என காப்பாளர்களுக்கு தக்க அறிவுரை வழங்கிட மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அலுவலர் கேட்டுக் கொள்ளப்படுகிறார். விடுதியில் தங்கி கல்வி பயிலும் மாணவர்களின் பாதுகாப்பிற்கு காப்பாளர்கள் முழு பொறுப்பு வாய்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து