முக்கிய செய்திகள்

குருப் – திரை விமர்சனம்

திங்கட்கிழமை, 15 நவம்பர் 2021      சினிமா
Tulkar-Salman 2021 11 15

Source: provided

இயக்குனர் ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ள படம் குருப். இந்த படத்தில் ஷோபிடா துலிபலா கதாநாயகியாக நடித்துள்ளார். படத்திற்கு சுசின் இசையமைக்க நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார். கதை - கேரளாவில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவானது தான் இந்த குரூப் படம். குரூப் என்ற கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் நடித்திருக்கிறார். துல்கர் விமானப் படையில் பயிற்சி எடுக்கிறார். பின் பாம்பேயில் வேலை செய்கிறார். உடல் நலக்குறைவு காரணமாக விடுமுறை எடுத்து செல்கிறார். சில நாட்களில் துல்கர் சல்மான் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகிறது. ஆனால், துல்கர் சாகவில்லை. உயிருடன் இருக்கும் அவர் தனது பெயரை குரூப் என்று மாற்றிக்கொண்டு வெளிநாடு செல்கிறார். வெளிநாட்டில் தனது பெயரில் இன்சூரன்ஸ் செய்துவிட்டு இந்தியா திரும்பினார். பிறகு அந்த இன்சூரன்ஸ் பணத்தை ஏமாற்றி அபகரிக்க நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் இணைந்து முயற்சி செய்கிறார். இறுதியில் இன்சூரன்ஸ் பணம் என்னானது என்பது தான் படத்தின் கிளைமாக்ஸ். துல்கர் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் கலக்கியிருக்கிறார். நாயகி ஷோபிடாவும் தன் பங்குக்கு நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். படத்திற்கு ஒளிப்பதிவும், பின்னணி இசையும் பக்கபலமாக அமைந்திருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து