முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திரைப்பட இயக்குனர் கோவி. மணிசேகரன் மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்

வியாழக்கிழமை, 18 நவம்பர் 2021      சினிமா
Image Unavailable

திரைப்பட இயக்குனர் கோவி. மணிசேகரன் மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 

தமிழ் எழுத்துலகில் பொன்விழா கண்டவரும், திரைப்பட இயக்குநருமான கோவி. மணிசேகரன் தனது 96-வது வயதில் மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

புதினங்கள் படைப்பதில் ஆர்வமும், ஆற்றலும் நிறைந்த அவர் மறைந்த 'இயக்குநர் இமயம் கே.பாலச்சந்தரிடம்  21 ஆண்டுகளுக்கு மேல் உதவி இயக்குநராக பணியாற்றியவர். தமிழ் எழுத்துலகில் தனி முத்திரை பதித்த அவர் திரைப்பட இயக்குநராகவும் புகழ் பெற்றவர். சாகித்ய அகாதமி விருது பெற்ற அவர், நாடகங்கள், சிறுகதை தொகுப்புகள், சமூக, வரலாற்றுப் புதினங்கள் எழுதி 50 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் எழுத்துலகிற்கு பெருமை சேர்த்தவர்.

அவர் எழுதிய குற்றால குறவஞ்சி என்ற வரலாற்றுப் புதினம், இயக்கிய தென்னங்கீற்று திரைப்படம் இன்றும் அவர் பெயர் சொல்லுகின்றன. தமிழ் எழுத்துலகம் ஒரு மாபெரும் எழுத்தாளரை இழந்து தவிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் தமிழ் எழுத்துலகத்திற்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து