முக்கிய செய்திகள்

வர்த்தக ரீதியான விமான சேவை டிச. 15-ம் தேதி முதல் தொடக்கம்

வெள்ளிக்கிழமை, 26 நவம்பர் 2021      இந்தியா
flight 2021 11 26

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட வர்த்தக ரீதியிலான விமான சேவை டிசம்பர் 15-ம் தேதியில் இருந்து தொடங்கப்பட இருக்கிறது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக  விமான போக்குவரத்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் தடைசெய்யப்பட்டது. அதன்பின் வெளிநாடுகளில் சிக்கியவர்களை இலவசமாக ஏர் இந்தியா விமானம் மூலம் இந்திய அரசு மீட்டது. அதன்பின் அதற்கு பணம் வசூலித்தது. இதனால், பல்வேறு நாடுகள் தங்களுடைய நாட்டின் விமானங்களை இயக்க இந்தியா அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன. அதன்படி பல்வேறு நாடுகளுக்கு இந்தியா இரு நாடுகளுக்கு இடையில் விமானங்களை இயக்கி வருகிறது. அதேபோல் இந்தியாவுக்கு அந்தந்த நாடுகள் விமானங்களை இயக்கி வந்தன.

இந்த நிலையில் வர்த்தக ரீதியிலான விமான சேவை டிசம்பர் 15-ம் தேதியில் இருந்து மீண்டும் தொடங்கப்படும் என இந்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு நாடுகள் பட்டியல் மூன்றாக பிரிக்கப்பட்டு, அதற்கு ஏற்ப கட்டுப்பாட்டுடன் விமானங்கள் இயக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து