முக்கிய செய்திகள்

மே. வங்கத்தில் நடந்த சாலை விபத்தில் 18 பேர் பலி: பிரதமர் மோடி இரங்கல்

ஞாயிற்றுக்கிழமை, 28 நவம்பர் 2021      இந்தியா
Modi 2020 12 14

Source: provided

கொல்கத்தா : மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த சாலை விபத்தில் 18 பேர் பலியாயினர். இதற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 

மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில், ஹன்ஸ்கலியில் நெடுஞ்சாலையில், இறந்தவர் உடல் மற்றும் 35 பேருடன் சென்ற மினி டிரக் ஒன்று மற்றொரு டிரக் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே 12 பேர் பலியாகினர். மேலும்,  மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் 6 பேர் உயிரிழந்தனர். 

போலீசார் மற்றும் உள்ளூர் மக்கள் உதவியுடன் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கடும் பனி மூட்டம் காரணமாக, எதிரே வந்த வாகனம் தெரியாததால், இந்த விபத்து நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.  

சாலை விபத்தில் 18 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து கடும் வேதனை தெரிவித்துள்ள பிரதமர் மோடி, காயம் அடைந்தவர்கள் விரைவாக குணம் அடைய விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து