முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய வகை கொரோனா ஓமிக்ரான் எதிரொலி: அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் கடிதம் : கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவு

ஞாயிற்றுக்கிழமை, 28 நவம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : புதிய வகை கொரோனா ஓமிக்ரான் வைரஸ் பரவல் எதிரொலியாக கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு  அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். 

இது குறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 

ஓமிக்ரான் வகை கொரோனாவை தடுக்க கண்காணிப்பை தீவிரப்படுத்த அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு  அறிவுறுத்தப்பட்டுள்ளது.  கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை குறைக்கக்கூடாது.  தென்னாப்ரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருவோரை 8 நாட்களுக்குப்பின் மீண்டும்  பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.   கொரொனா தடுப்பூசி போடும் பணிகளை தொடர்ந்து துரிதப்படுத்தவும் மாவட்ட கலெக்டர்களுக்கு  அறிவுறுத்தப்பட்டுள்ளது.   கொரோனாவால் உயிரிழப்பு ஏற்படாமல் கொரோனா தடுப்பூசி கட்டுப்படுத்தும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.   தகுதியுடைவர்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்தும் வேகத்தை அதிகப்படுத்த வேண்டும்.  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு மருத்துவத்துறை செயலாளார் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியில், தமிழகத்தில் ஓமிக்ரான் கொரோனா இல்லை. கொரோனா இல்லை என்று பொதுமக்கள் கவனக்குறைவாக இருக்கக்கூடாது முகக்கவசம் அணிய வேண்டும் என்று தெரிவித்தார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து