முக்கிய செய்திகள்

சமுத்திரக்கனி நடிக்கும் சித்திரைச் செவ்வானம்

ஞாயிற்றுக்கிழமை, 28 நவம்பர் 2021      சினிமா
Samuthirakkani 2021 11 28

Source: provided

சமுத்திரக்கனி நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் சித்திரைச் செவ்வானம். இயக்குனர் விஜய் எழுத்தில், ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா இப்படத்தை இயக்கியுள்ளார். சமுத்திரக்கனி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  அவருடன் பூஜா கண்ணன் மற்றும் ரீமா கல்லிங்கல் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு சாம் CS இசையமைக்க, பிரவீன் KL படத்தை தொகுக்க  மனோஜ் பரமஹம்சா மற்றும்  K.G . வெங்கடேஷ் ஒளிப்பதிவாளர்களாக பணிப்புரிந்துள்ளனர். A.L அழகப்பன் மற்றும் P. மங்கையர்க்கரசி ஆகியோர் இணைந்து படத்தை தயாரித்துள்ளனர்.  படம் பற்றி இயக்குநர் சமுத்திரகனி கூறுகையில், ஒரு அப்பா,  மகள் இருவருக்குமிடையிலான வாழ்க்கை பயணம், அதில் நடக்கும் பிரச்சனைகள் தான் கதை என்றார். இப்படி மனதை உருக்கும் ஒரு உணர்வுப் பூர்வமான கதையை, என் தம்பி சொல்வார் என நான் எதிர்பார்க்கவேயில்லை. கேட்டதுமே எனக்கு மிகவும் பிடித்து விட்டது. உடனே ஷூட்டிங் போகலாம் என்றேன். மிக அற்புதமான படமாக உருவாக்கிவிட்டார். இம்மாதிரியான ஒரு மிகச்சிறந்த படத்தில் என்னையும் பங்கேற்க வைத்ததற்கு சில்வாவுக்கு நன்றி. அனைவரும் குடும்பத்துடன் பார்க்கும் திரைப்படமாக இருக்கும்" என்றார். 

இப்படம் இந்த வாரம் ஜீ5 OTT தளத்தில் வெளியாகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து