முக்கிய செய்திகள்

கேரளாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைக்காதவர்களுக்கு இலவச சிகிச்சை 'கட்' : முதல்வர் பினராயி விஜயின் அறிவிப்பு

புதன்கிழமை, 1 டிசம்பர் 2021      இந்தியா
Pinarayi Vijayan- 2021 11 03

Source: provided

திருவனந்தபுரம் : கேரளாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைக்காதவர்களுக்கு இலவச சிகிச்சை 'கட்' என்று முதல்வர் பினராயி விஜயின் அறிவித்துள்ளார். மேலும், தடுப்பூசி செலுத்தாதவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை வழங்கப்படமாட்டாது என்றும் தெரிவித்துள்ளார். 

கொரோனா தொற்று முதல் அலையில் கடும் கட்டுப்பாடுகளைக் கடைபிடித்து கொரோனாவில் பெரிதாக பாதி்க்கப்படாமல் தப்பித்தது. ஆனால், கொரோனா 2-வது அலையில் கேரள மாநிலம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. கடுமையான கட்டுப்பாடுகள், தடுப்பூசி செலுத்துதல் போன்றவற்றை தீவிரமாகக் கடைபிடித்ததன் காரணமாக தற்போது கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இருப்பினும் கேரளாவில் இன்னும் தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தாதவர்கள், 2-வது டோஸ் செலுத்தாதவர்கள் அதிகமாக இருக்கின்றனர்.

இந்த சூழலில், கொரோனாவின் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் பரவல் அச்சமும் சேர்ந்திருப்பதால் கேரள அரசு கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்தி வருகிறது. இது குறித்து முதல்வர் பினராயி விஜயன் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், “கேரளாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்காதவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை கிடையாது. அவர்கள் கொரோனாவில் பாதிக்கப்பட்டால் இலவச சிகிச்சையும் வழங்கப்படாது.

தடுப்பூசிசெலுத்தாத ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் அலுவலர்கள் மக்களுடன் தொடர்பில் இருப்போர் வாரந்தோறும் பிசிஆர் பரிசோதனை முடிவுகளை வழங்க வேண்டும். இந்தப் பரிசோதனைகளுக்கு அவர்களே கட்டணத்தையும் செலுத்தி அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும். ஒமைக்ரான் வைரஸ் குறித்த அச்சம் பரவி வருவதால், தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து