முக்கிய செய்திகள்

ஜாவத் ' புயல் ஆந்திரா - ஒடிசா அருகே நாளை கரையை கடக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

வியாழக்கிழமை, 2 டிசம்பர் 2021      இந்தியா
Indian-Meteorological 2021

வங்கக்கடலில் வலுப்பெற்றுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது என்று தெரிவித்துள்ள இந்தியா வானிலை ஆய்வு மையம், பின்னர் ஜாவத் ' புயல் ஆந்திரா - ஒடிசா அருகே நாளை கரையை கடக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில், தெற்கு அந்தமான் பகுதியில் கடந்த 3 நாட்களுக்கு முன் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது 12 மணி நேரத்தில் தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறும் என கூறப்பட்டது. இந்நிலையில் நேற்று அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வுப்பகுதி தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது.  இது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், மண்டலமாக மாறிய பிறகு, அடுத்த 24 மணி நேரத்தில் 'ஜாவத்' புயலாக வலுப்பெறும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புயல் வரும் 4-ம் தேதி அன்று வடக்கு ஆந்திரா-ஒடிசா அருகே கரையை கடக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து