முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண்கள் புகைபிடிப்பதால் விவாகரத்து அதிகரிப்பு: பாக்.பெண் எம்.பி. சர்ச்சை பேச்சு

வெள்ளிக்கிழமை, 3 டிசம்பர் 2021      உலகம்
Image Unavailable

பெண்கள் புகைப்பிடிப்பதால் விவாகரத்து அதிகரித்துள்ளதாக பாகிஸ்தான் பெண் எம்.பி., ஒருவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் பெண் எம்.பி.,யான டாக்டர் நவுஷீன் ஹமீத், இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற புகையிலை குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

 பாகிஸ்தானில் பெண்களிடையே புகைப்பிடிக்கும் பழக்கம் அதிகரித்திருப்பதே, சமீபத்தில் விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கை உயரக் காரணமாக இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் மட்டும் பாகிஸ்தானில் புகைப்பிடிக்கும் பெண்களின் எண்ணிக்கை வியக்கத்தக்க அளவில் அதிகரித்திருக்கிறது.

புகைப்பிடிக்கும் பழக்கம் இருப்பதனால் புகைப்பிடிப்பவர்களும், அவர்களின் குடும்பத்தாரும் சமூக ரீதியிலான பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். அப்படி பாதிக்கப்பட்ட பெண்களை தனிப்பட்ட முறையில் நானே பார்த்திருக்கிறேன். புகைப்பிடிக்கும் பெண்கள் திருமணம் செய்த பின்னர் அவர்கள் விவாகரத்தை சந்திக்க நேர்கிறது. ஏனென்றால் இந்த பழக்கத்தை புகுந்த வீட்டார் ஏற்றுக்கொள்வதில்லை என்று பேசினார். அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் அங்கு நடத்தப்பட்ட ஆய்வில், பாகிஸ்தானில் விவாகரத்து வழக்குகள் 58 சதவீதம் அதிகரித்திருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் உலகிலேயே புகையிலை பொருட்கள் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் நாடுகளுள் பாகிஸ்தானும் ஒன்றாக இருப்பது சிகரெட் பயன்பாட்டு அதிகரிப்புக்கு காரணமாக சொல்லப்படுகிறது. மலிவாக புகையிலை பொருட்கள் கிடைப்பதால், பலரும் புகைப்பழக்கத்திற்கு ஆளாகின்றனர். இதனால், பாகிஸ்தானில் மொத்த இறப்புகளில் 11 சதவீதம் புகைப்பிடிப்பதால் ஏற்படுவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து