முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓமைக்ரான் வைரஸ் அச்சம்: தமிழக எல்லைகளில் தீவிர கண்காணிப்பு : பரிசோதனைக்குப் பின்னரே அனுமதி

வெள்ளிக்கிழமை, 3 டிசம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

கோவை : கா்நாடகத்தில் இருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழக எல்லைகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

புதிய வகை ஓமைக்ரான் தொற்று தென்னாப்பிரிக்காவில் முதல்முறையாக கண்டறியப்பட்ட நிலையில் தொடர்ந்து 20-க்கும் மேற்பட்ட  நாடுகளுக்கு பரவியுள்ளது. தென்னாப்பிரிக்காவில் இருந்து கர்நாடகம் வந்த இருவருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதையடுத்து தமிழக சுகாதாரத்துறை தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழக எல்லைகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

குறிப்பாக தமிழக- கர்நாடக எல்லைகளில் தீவிர மருத்துவக் கண்காணிப்பு செய்யப்பட்டு வருகிறது. முழு பரிசோதனைக்குப் பின்னரே எல்லைகளில் மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.  தமிழகத்தின் அனைத்து எல்லைகளிலும் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து