முக்கிய செய்திகள்

டேட்டிங் வலைதளம் மூலம் மலர்ந்த காதல்: 20 வயது மாணவியை விரைவில் மணமுடிக்கிறார் 77 வயது முதியவர்

திங்கட்கிழமை, 6 டிசம்பர் 2021      உலகம்
Joe-David 2021 12 06

மியான்மரை சேர்ந்த 20 வயது பெண் மற்றும் 77 வயது வாலிபரின் காதல்  ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. 

20 வயதான ஜோ மியான்மரில் வசித்து வருகிறார். அவர் ஒரு மாணவி ஆவார்.  அவரது 77 வயதான காதலன் டேவிட் இங்கிலாந்தில் வசிக்கிறார். அவர் இசை அமைப்பாளராக உள்ளதாக கூறப்படுகிறது.  டேவிட்டிற்கு குழந்தைகள் இல்லை. கடந்த ஒன்றரை வருடங்களாக இருவரும் காதலித்து வருகின்றனர். இருவருக்கும் இடையே ஆயிரக்கணக்கான மைல் தூரம் இருந்தாலும், அவர்கள் காதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இருவருக்குமான 57 வயது இடைவெளி கூட இவர்களின் காதலுக்கு தடையாக இல்லையாம். 

ஜோ மற்றும் டேவிட் டேட்டிங் தளம் மூலம் இருவரும் சந்தித்தனர். ஜோ, 18 மாதங்களுக்கு முன்பு, அவள் ஒரு வழிகாட்டியை தேடிக் கொண்டிருந்தாள். அவள் படிப்பிற்கு நிதி உதவி செய்யும் ஒரு வழிகாட்டியை அவள் கண்டுபிடித்தார். மறுபுறம், டேவிட் காதலிக்கும் மனநிலையுடன் எப்போதாவது இந்த டேட்டிங் தளத்திற்கு வருவாராம். டேவிட் தன்னை ஒருபோதும் வயதானவராகக் கருதுவதில்லை என்றும் தன்னை எப்போதும் இளமையாகவே வைத்திருப்பதாகவும் கூறுகிறார்.

டேட்டிங் தளத்தில் டேவிட்டை கண்டுபிடித்ததை, ஜோ தன்னை பற்றிய விளக்கத்தில் குறிப்பிட்டு உள்ளார். பரஸ்பரம் தங்களை காதலன் என்றும் காதலி என்றும் அழைப்பதைத் தவிர்ப்பதாக டேவிட் கூறுகிறார். டேவிட் மற்றும் ஜோ பரஸ்பரம் உண்மையான நண்பர்களாகவும், உற்ற துணையாகவும் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

 

கொரோனா உள்நாட்டு சூழ்நிலை காரணமாக இருவரும்  விலகி இருப்பதாக டேவிட் கூறி உள்ளார். ஜோவின் வழிகாட்டியாகவும் வாழ்க்கைத் துணையாகவும் இருப்பதில் மகிழ்ச்சி அடைவதாக டேவிட் கூறுகிறார். விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும். ஜோவின் பாஸ்போர்ட் தயாரான உடன், டேவிட்டை சந்திக்க அவர் இங்கிலாந்துக்கு வருவார் என டேவிட் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து