முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சூர்யவன்ஷி புதிய சாதனை

வியாழக்கிழமை, 3 ஜூலை 2025      விளையாட்டு
SURYAVAN

Source: provided

19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 ஒருநாள், 2 டெஸ்ட் போடிகளில் விளையாட இங்கிலாந்துக்குச் சென்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெல்ல, இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து வென்றது. அடுத்ததாக மூன்றாவது போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. இந்தப் போட்டி மழையின் காரணமாக 40 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது.

முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 40 ஓவர்களில் 268/8 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தாமஸ் ரெவ் 76 ரன்கள் எடுத்தார். அடுத்து விளையாடிய இந்திய அணி 34.3 ஓவர்களில் 274/6 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. 2-1 என தொடரில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. இந்தப் போட்டியில் 14 வயதான இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷி 31 பந்துகளில் 86 ரன்கள் குவித்து அசத்தினார். இதில் 6 பவுண்டரிகள், 9 சிக்ஸர்கள் அடங்கும். இதன்மூலம் யு-19 இந்திய வீரர்களில் அதிக சிக்ஸர்கள் அடித்தவராக சாதனை படைத்துள்ளார்.

யுகி பாம்ப்ரி ஜோடி முன்னேற்றம்

'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி- அமெரிக்காவின் ராபர்ட் கலோவே ஜோடி, அர்னியடோ (மொனாக்கோ)- மானுவல் குனர்ட் (பிரான்ஸ்) இணையுடன் மோதியது.

இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய யுகி பாம்ப்ரி ஜோடி 7-6 மற்றும் 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.  

3வது சுற்றில் சபலென்கா 

ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான 'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் மிகவும் கவுரவமிக்கதும், முதன்மையானதுமான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.

இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான அரினா சபலென்கா (பெலாரஸ்), செக் குடியரசின் மேரி பவுஸ்கோவா உடன் மோதினார்.  இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சபலென்கா 7-6 (7-4), 6-4 என்ற செட் கணக்கில் மேரி பவுஸ்கோவாவை வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

ஆடும் லெவனில் ஸ்மித்  

ஆஸ்திரேலிய அணி மேற்கிந்தியத் தீவுகள் நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் செய்து 3 டெஸ்ட், 5 டி20 போட்டிகள் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் பார்படாஸில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் ஆஸி. அணி 159 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி நேற்றிரவு 7.30 மணிக்கு தொடங்கிய து.

இந்தப் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் இடம்பிடித்துள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கேட்ச் பிடிக்கும்போது ஸ்மித் விரலில் காயம் ஏற்பட்டது. இந்தக் காரணத்தினால் மே.இ.தீ. அணிக்கு எதிரான முதல் போட்டியில் பங்கேற்கவில்லை. 2-ஆவது போட்டிக்கான பயிற்சியில் ஸ்மித் ஈடுபட்டுள்ளார். ஸ்மித் அணியில் இணைந்தாலும் முன்னெச்சரிக்கை காரணமாக ஃபீல்டிங்கில் ஸ்லிப்பில் நிற்காமல் எல்லைக் கோட்டுக்கு அருகில் எங்காவது நிற்பார் எனக் கூறப்பட்டுள்ளது. ஜோஷ் இங்லீஷ் அணியில் இருந்து விலகியுள்ளார். கேமரூன் கிரீனுக்குப் பதிலாக லபுஷேன் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் இடம்பெறவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ் வோக்ஸ் ஆதங்கம்

இங்கிலாந்து பந்து வீச்சில் ஒருவரையும் குறை கூற முடியாது என்றாலும் சிறந்த முறையில் வீசியவர் யார் என்று தேர்வு செய்யச் சொன்னால் கிறிஸ் வோக்ஸ் என்று சொல்லலாம். 2 விக்கெட்டுகளை அவர் 59 ரன்களுக்கு வீழ்த்தினார். பர்மிங்ஹாமில் நேற்று முன்தினம் (ஜூலை 2) தொடங்கிய 2-ஆவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்தது.  முதல்நாள் முடிவில் இந்திய அணி 310/5 ரன்கள் குவித்தது. இந்த போட்டியில்,  ஜெய்ஸ்வாலுக்கும் கருண் நாயருக்கும் எல்.பி.டபிள்யூக்கள் ‘அம்பயர்ஸ் கால்’ ஆகவில்லை எனில் இந்திய அணியின் பாடு திண்டாட்டமாயிருக்கும் எங்கள் பாடு கொண்டாட்டமாயிருக்கும் என்று கிறிஸ் வோக்ஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறும்போது, “அந்த இரண்டு விக்கெட்டுகளும் எங்களுக்குச் சாதகமாக அமைந்திருந்தால் அதாவது களநடுவர் எல்.பி. கொடுத்திருந்தால் அம்பயர்ஸ் காலில் ஜெய்ஸ்வால், கருண் நாயர் தப்பியிருக்க முடியாது. 30 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் என்றால் எங்களுக்குச் சாதகமாக டெஸ்ட் இன்னும் வலுப்பட்டிருக்கும். முதல் நாளே வேறு மாதிரி அமைந்திருக்கும். நாங்கள் எங்கள் பணிகளைச் சிறப்பாகச் செய்தோம், உணவு இடைவேளைக்குப் பிறகு பிட்ச் ஃபிளாட்டாக மாறி விட்டது. கடைசி செஷனில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தால் இந்திய டெய்ல் எண்டர்களை விரைவில் வீட்டுக்கு அனுப்பியிருப்போம். ஆனால் ஷுப்மன் கில், ஜடேஜா நன்றாக ஆடினார்கள் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து