முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2-வது டெஸ்ட் போட்டி: சுப்மன் கில் இரட்டை சதம்

வியாழக்கிழமை, 3 ஜூலை 2025      விளையாட்டு
Subman-Gill-Virat-Kohli -20

Source: provided

பர்மிங்ஹாம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் இரட்டை சதம் விளாசி அசத்தியுள்ளார்.

இந்திய அணி பேட்டிங்...

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் (ஜூலை 2) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

310 ரன்கள்... 

முதல் இன்னிங்ஸில் விளையாடி வரும் இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 310 ரன்கள் எடுத்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 87 ரன்கள், கருண் நாயர் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் சுப்மன் கில் சதம் விளாசி அசத்தினார். சுப்மன் 114 ரன்களுடனும் ரவீந்திர ஜடேஜா 41 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

ஜடேஜா அரைசதம்... 

இந்த நிலையில், நேற்று (ஜூலை 3) இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கியது முதலே கேப்டன் சுப்மன் கில் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர். ரவீந்திர ஜடேஜா அரைசதம் கடந்து அசத்தினார். இருப்பினும், அவர் 89 ரன்களில் ஜோஷ் டங் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதில் 10 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.

இரட்டை சதம்....

மறுமுனையில் சிறப்பாக விளையாடி வரும் சுப்மன் கில் வேகமாக ரன்கள் குவித்து வருகிறார். சிறப்பாக விளையாடிய அவர் டெஸ்ட் போட்டிகளில் அவரது முதல் இரட்டை சதத்தைப் பதிவு செய்தார். அவர் 311 பந்துகளில் இரட்டை சதம் விளாசினார். அதில் 21 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். இந்திய அணி அதன் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 480 ரன்களைக் கடந்து விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து