முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாடு முழுவதும் 10 ஆயிரம் கொள்கை விளக்க பொதுக்கூட்டங்கள் த.வெ.க. நிர்வாகிகள் ஏற்பாடு

வியாழக்கிழமை, 3 ஜூலை 2025      தமிழகம்
Vijay 2024-11-02

Source: provided

சென்னை: த.வெ.க. கொள்கைகள் மற்றும் மக்கள் நலத் திட்டங்களை பொதுமக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதற்காக தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் கிராமங்களில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் த.வெ.க. சார்பில் நடைபெற இருக்கிறது.

த.வெ.க.வில் கட்சி ரீதியாக பிரிக்கப்பட்டுள்ள 100-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் 10 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு மண்டல வாரியாக நகரங்கள், கிராமங்கள் என முக்கிய இடங்களில் பொதுக்கூட்டம், தெருமுனை பிரசார கூட்டங்கள் நடத்தி அதன் வாயிலாக த.வெ.க. திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல த.வெ.க. தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார்.

கூட்டத்திற்கான ஏற்பாடுகளை விஜய் உத்தரவின் பேரில் கட்சி பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர். கூட்டத்தில் 2026 தேர்தலில் த.வெ.க.வின் கொள்கைகள், மக்கள் பணியில் கட்சியின் முழு ஈடுபாடு, மற்ற அரசியல் கட்சிகளில் இருந்து வேறுபட்டு த.வெ.க. செயல்படுவது, ஆளுங்கட்சியினரின் குறைபாடுகளை மக்களுக்கு எடுத்து சொல்லி ஆதரவு பெறுவது, தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதற்கு விஜய்யின் தனது தொலை நோக்கு திட்டங்கள் குறித்து விளக்குகிறார்கள். த

த.வெ.க.வை பொறுத்தவரை 2026 தேர்தலுக்கான முதற்கட்ட பிரசார மேடையாக இந்த பொதுக்கூட் டங்கள் அமைய இருக்கிறது. தமிழகம் முழுவதும் நடைபெற இருக்கும் இந்த பொதுக்கூட்டங்கள் த.வெ.க.வின் தேர்தல் களத்துக்கு அடித்தளமாக இருக்கும்.

இந்நிலையில் த.வெ.க. செயற்குழு கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் விஜய் தலைமையில் நடைபெற இருக்கிறது. கூட்டத்தில் 1000-க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் பங்கேற்க இருக்கின்றனர். மேலும் 2026 தேர்தல் திட்டங்கள், சுற்றுப் பயணம், மக்கள் நல பணிகள் மற்றும் அடிப்படை பிரச்சனைகள், தொகுதி பிரச்சனைகள் குறித்து பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட இருக்கிறது. தொடர்ந்து கூட்டத்தில் விஜய் அதிரடி அரசியல் பேசுவார் என்பதால் கூட்டத்திற்கு நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து