முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனுஷின் வாத்தி படப்பிடிப்பு துவங்கியது

திங்கட்கிழமை, 10 ஜனவரி 2022      சினிமா
Image Unavailable

Source: provided

தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாராகும் ஒரு படத்தில் தனுஷ் ஒப்பந்தமானார். இப்படத்தை ‘தோழி ப்ரேமா’, ‘ரங் தே’ உள்ளிட்ட படங்களை இயக்கிய வெங்கட் அட்லுரி இயக்குகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்துக்கு தமிழில் ‘வாத்தி’ என்றும், தெலுங்கில் ‘சார்’ என்றும் தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் தனுஷ் ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். சில தினங்களுக்கு முன் ‘வாத்தி’ படத்தின் பூஜை நடைபெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இதனை படக்குழு தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தனுஷ் கல்லூரி மாணவர் கெட்டப்பில் தோன்றியுள்ள இந்தப் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இதனிடையை, தனுஷின் ஹாலிவுட் திரைப்படமான ‘தி கிரே மேன்’ வரும் ஜூலை மாதம் நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!