முக்கிய செய்திகள்

விமானி அறைக்குள் புகுந்து கட்டுப்பாட்டு கருவிகளை சேதப்படுத்திய பயணி சிக்கினார்

புதன்கிழமை, 12 ஜனவரி 2022      உலகம்
American-Airlines 2022 01 1

அமெரிக்க ஏர்லைன்ஸ் பயணி ஒருவர் திடீரென விமானி அறைக்குள் புகுந்து கட்டுப்பாட்டு கருவிகளை சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸில் இருந்து மியாமிக்கு அமெரிக்க ஏர்லைன்சுக்கு சொந்தமாக போயிங் 737-800 விமானம் செல்ல இருந்தது. இந்த விமானத்தில் 121 பயணிகள், 6 விமானப் பணியாளர்கள் இருந்தனர். விமானம் புறப்பட தயாரானபோது, பயணி ஒருவர் திடீரென விமானி அறைக்குள் (Cockpit) புகுந்து, கண்ட்ரோல் கருவிகளை கண்மூடித்தனமாக தாக்கி சேதப்படுத்தினார்.

விமானி தடுக்க முயன்றும், பலன் அளிக்கவில்லை. கண்ட்ரோல் கருவிகளை சேதப்படுத்திய நிலையில், காக்பிட் ஜன்னல் வழியாக கீழே குதிக்க முயன்றார். ஒரு வழியாக விமான பணியாளர்கள் அவரை பிடித்து விமான நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.  அந்த பயணி ஏன் இவ்வாறு நடந்து கொண்டார் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து