முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓய்வு பெற்ற கோவில் அர்ச்சகர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதிய தொகை: முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்

வியாழக்கிழமை, 13 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

சென்னை தலைமைச் செயலகத்தில், நேற்று இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத திருக்கோயில்களில் 20 ஆண்டுகள் பணிபுரிந்து 60 வயதைக் கடந்து ஓய்வு பெற்ற கிராமக்கோயில் பூசாரிகள் ஓய்வூதியத்தை 3000 ரூபாயிலிருந்து ரூ.4000/- ஆகவும், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஓதுவார்கள், அர்ச்சகர்கள், இசைக்கலைஞர்கள், வேதபாராயணர்கள், அரையர்கள், திவ்வியபிரபந்தம் பாடுவோர், மற்றும் அர்ச்சகர்களுக்கு ஓய்வூதியத்தை 1000 ரூபாயிலிருந்து ரூ.3000/-ஆகவும் உயர்த்தி, உயர்த்தப்பட்ட ஓய்வூதியத் தொகையை 10 பயனாளிகளுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். 

இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறையின் 2021-22ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத திருக்கோயில்களில் 20 ஆண்டுகள் பணிபுரிந்து 60 வயதைக் கடந்து ஓய்வு பெற்ற கிராமக்கோயில் பூசாரிகள் ஓய்வூதியத்தை 3000 ரூபாயிலிருந்து ரூ.4000/- ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் முனைவர் க. பொன்முடி, பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தர மோகன், இந்துசமய அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!