முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை ஏற்பு: கேரளாவில் 6 மாவட்டங்களில் இன்று 'பொங்கல்' விடுமுறை: கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு

வியாழக்கிழமை, 13 ஜனவரி 2022      இந்தியா
Image Unavailable

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று, கேரளாவில் 6 மாவட்டங்களில் இன்று 'பொங்கல்' விடுமுறையை அறிவித்துள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.

கேரளாவில் 6 மாவட்டங்களில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்குமாறு கேரள முதல் மந்திரி பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்ததை அடுத்து கேரள அரசு இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது.

முன்னதாக கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியிருந்த கடிதத்தில், “தமிழ் பேசும் மக்கள் பெருமளவில் வாழும் கேரளாவின் ஆறு மாவட்டங்களில் பொங்கல் பண்டிகைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பது குறித்த கோரிக்கை தொடர்பாக தங்கள் அன்பான உடனடி கவனத்தை ஈர்க்க விழைகிறேன். 

கடந்த 12 ஆண்டுகளாக கேரள அரசு ஜனவரி 14-ம் நாள் பொங்கல் பண்டிகைக்கான உள்ளூர் விடுமுறை அறிவித்து வருகிறது என்று அறிகிறேன். ஜனவரி 14-ம் தேதி தை தமிழ் மாதத்தின் முதல் நாளாகும். ஆனால் இந்த 2022 ஆம் ஆண்டில் ஜனவரி 15-ம் நாளினை இந்த ஆறு மாவட்டங்களில் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே தமிழ் சமூகங்களுக்கிடையே உலகம் முழுவதும் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையை உள்ளூர் விடுமுறை தினமாக ஜனவரி 14-ம் இன்று அறிவித்திட நடவடிக்கை மேற்கொள்ள நான் தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ஜனவரி 15-ந்தேதி விடுமுறையை மாற்றி கேரளாவில் தமிழ் பேசும் மக்கள் அதிகம் உள்ள 6 மாவட்டங்களில் இன்று (ஜனவரி 14-ம் தேதி) விடுமுறை என கேரள அரசு அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து