முக்கிய செய்திகள்

மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடம்: இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 5,488 ஆக உயர்வு

வியாழக்கிழமை, 13 ஜனவரி 2022      இந்தியா
omicron-2021-12-28

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 5,488 ஆக உயர்ந்துள்ளது. இதில் மகாராஷ்டிரா மாநிலம் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.

தென்ஆப்பிரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் 11-ந்தேதி கண்டுபிடிக்கப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் உலகம் முழுக்க வேகமாக பரவி வருகிறது.  இந்தியாவில் 28 மாநிலங்களில் ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,488 ஆக அதிகரித்துள்ளது. 2,162 பேர் சிகிசைக்கு பின் குணமடைந்துள்ளனர்.

ஒமைக்ரான் பாதிப்பில் மகாராஷ்டிரா மாநிலம் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.  அந்த மாநிலத்தில் 1367 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு  கண்டறியப்பட்டுள்ளது. அடுத்தபடியாக ராஜஸ்தானில் 792 பேருக்கும், டெல்லியில் 549 பேருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து