முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி. தேர்தல்: முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க.: கோரக்பூர் தொகுதியில் யோகி ஆதித்யநாத் போட்டி

சனிக்கிழமை, 15 ஜனவரி 2022      அரசியல்
Image Unavailable

உத்தரபிரதேச தேர்தலில் போட்டியிடும் தங்கள் கட்சியின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. நேற்று வெளியிட்டுள்ளது. அதன்படி, உத்தரபிரதேச முதல்வரான  யோகி ஆதித்யநாத் கோரக்பூர் தொகுதியில் போட்டியிடுவார் என பாஜக தலைமை அறிவித்துள்ளது.

403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.  பிப்ரவரி 10-ம் தேதி முதல் கட்ட தேர்தல் தொடங்கி மார்ச் 7-ம் தேதி இறுதிக்கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 10-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.  தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. 

இந்நிலையில், உத்தரபிரதேச தேர்தலில் போட்டியிடும் தங்கள் கட்சியின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. நேற்று வெளியிட்டுள்ளது. அதன்படி, உத்தரபிரதேச முதல்வரான  யோகி ஆதித்யநாத் கோரக்பூர் தொகுதியில் போட்டியிடுவார் என பா.ஜ.க. தலைமை அறிவித்துள்ளது. அதேபோல், துணை முதல்வரான  கேசவ் பிரசாத் மவுரியா சிரது தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்ட தேர்தல் நடைபெற உள்ள 58 தொகுதிகளில் 57 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பா.ஜ.க. நேற்று அறிவித்துள்ளது. அதே போல், 55 தொகுதிகளுக்கு நடைபெற உள்ள இரண்டாம் கட்ட தேர்தலில் 38 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் பா.ஜ.க. நேற்று அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து