எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
தை பூசம் என்பது சைவ சமயத்தவர்களால் கொண்டாடப்பட்டு வரும் ஒரு விழாவாகும். நட்சத்திர வரிசையில், பூசம் எட்டாவது நட்சத்திரமாகும். தைமாதப் பூச நட்சத்திரம் பெரும்பாலும் பவுர்ணமியில் வரும். முருகனுக்கு உகந்த நாள்.
தைப்பூச தினம். தைமாதம் உத்தராயண காலத்தில் ஆரம்பம். உத்தராயணம் என்பது தேவர்களின் பகல் பொழுது என்பதால் தை மாதம் அவர்களின் காலைப் பொழுதாகும்.சிவாம்சமான சூரியன் மகர ராசியில் இருக்க, சக்தி அம்சமான சந்திரன் கடக ராசியில் (பூசம் நட்சத்திரம்) ஆட்சி பெற்றிருக்க, சூரிய சந்திரர்கள் பூமிக்கு இருபுறமும் நேர்கோட்டில் நிற்றல் தைப்பூசத்துடன் இணைந்த பவுர்ணமியில் நிகழும். இந்தச் சிறப்பு மிக்க தினம் தான் தைப் பூச தினம். இந்த தினம் நாளை 18-ம் தேதி கொண்டாடப்படுகிறது. தைப்பூச நன்னாளானது உலக சிருஷ்டியின் ஆரம்ப நாளாகவும் கொள்ளப்படுகிறது.
சிவசக்தி ஜக்கியம் இந்த நாளிலேயே நிகழ்ந்ததாகக் கொள்ளப்படுகிறது. சிவனின்றி சக்தியில்லை, சக்தியின்றி சிவனில்லை என்று கூறப்படுகிறது. அதாவது சிவனும் சக்தியும் இணைந்ததாலேயே உலகம் சிருஷ்டிக்கப்பட்டு இயக்கம் நிகழ்ந்தது என்பது பொருளாக அமைகிறது. சிவசக்தி இணைந்த இந்தப்புண்ணிய தினத்தில் முதலில் உருவாகியது நீர், அதன் பின் தொடர்ந்து நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் உருவாகின என்றும் நம்பிக்கை கொள்கிறோம். எனவே உலக இயக்கத்துக்கு ஆதாரமாக அவசியமாகவுள்ள பஞ்சபூதங்களும் சிருஷ்டிக்கப்பட்ட, வழிகோலிய புனிதமிகு நன்னாளாக இந்தத் தைப்பூச தினத்தைப் போற்றி வழிபாடு செய்கிறோம்.
இது வழிவழியாக இந்துக்கள் கைக்கொண்டுவரும் நம்பிக்கையின் வெளிப்பாடாக அமைகிறது. இயற்கையை வழிபடும் பாரம்பரியத்தின் ஒரு வெளிபாட்டை விளக்கும் தினமாகவும் தைப்பூசம் பெருமை பெறுகிறது. அவனின்றி ஒரு அணுவும் அசையாது என்பார்கள். அந்த அவனாகிய இறைவன் இறைவியுடன் இணைந்து கலந்தமையாலேயே உலக இயக்கம், இயற்கையின் அதாவது பஞ்சபூதங்கள் வழியாக நிகழ்கின்றது என்பதை நினைவில் கொள்ள வழிவகுக்கும் நாள் இந்நாள். உலகிலேயே உயிரினங்கள் யாவற்றினதும் தோற்றத்துக்கும் வாழ்வுக்கும் செயல்பாடுகளுக்கும் மறைவுக்கும் இயற்கையே காரணியாக அமைகிறது.
இயற்கையை மீறி எதுவும் செயல்படமுடியாது. அதாவது நம்பிக்கைக்கு மேலான சக்தியாகிய இறைசக்தியை மீறிச் செயற்பட முடியாது. பிறப்புக்கும் இறப்புக்கும் இயற்கையே விதியாக அமைகிறது. இதை வலியுறுத்துவதும் இந்தத்தைப்பூச நன்னாளின் ஒரு அம்சமாகும். தேவர்களின் குருவாகக்கொள்ளப்படும் பிரகஷ்பதி (குரு பகவான்) பூச நட்சத்திரத்தின் தேவதையாகக் கொள்ளப்படுகிறார். இவர் அறிவின் தேவதையாகவும் போற்றப்படுகிறார். பதஞ்சலி, வியாக்கிரபாதர் ஆகிய முனிவர்கள் இருவருக்கும் சிவபிரானாகிய நடராஜப்பெருமான் சிவதாண்டமாடிக் காணுப்படி செய்த நாளாகவும் தைப்பூசம் விளங்குகிறது.
அத்துடன் வாயு பகவானும், வர்ணபகவானும், அக்கினி பகவானும் சிவபிரானின் அதீத சக்தியை உணர்ந்த நாளாகவும் இந்த நாள் போற்றப்படுகிறது. அதாவது இயற்கையை கட்டுப்படுத்தும் சக்தியாக இறைவனே உள்ளார் என்பதை உணர்த்தப்பட்ட புண்ணிய நாள் இந்தத் தைப்பூச நன்னாளாகும். சிவனுக்குரிய சிறப்பு மிக்க நன்னாட்களில் ஒன்றாகக் கொள்ளப்படும் இத்தைப் பூச நன்னாளானது, முருகப் பெருமானுக்குரிய விசேஷ நாளாகவும் விளங்குகிறது. முருகப் பெருமான் அன்னையிடம் வேல் வாங்கிய திருநாளும் இதுவாக அமைகிறது.
சிவன் அருளினால் தோன்றிய முருகன் அன்னை சக்தியையும் பெற்று சிவசக்தி பேரருள் மிக்கவராக இந்தத் தைப்பூச நாளில் திகழ்வதால் முருகன் கோவில்களில் அபிஷேகம், திருவிழா நிகழ்த்தப்படுகின்றன. முருகனை வேண்டிப் பலர் இந்த நாளில் விரதமிருப்பார்கள். முருகப்பெருமானுக்கும், தைப்பூசத்துக்கும் உள்ள இத்தகைய தொடர்பு காரணமாகவே இந்த நாளில் அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு விழாக்கள் நடத்தப்படுகின்றன. தைப்பூசத்தை முன்னிட்டு பழனி முருகன் கோயிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களின் பல பகுதிகளில் இருந்தும் விரதம் இருந்து ஆயிரக்கணக்கான முருக அடியார்கள் பாத யாத்திரையாக வருகிறார்கள்.
பாதயாத்திரையாக வரும் பக்தர்கள், மார்கழி மாத ஆரம்பத்தில் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள். சஷ்டி கவசம், சண்முக கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களை அன்றாடம் பாராயணம் செய்து தைப்பூச நாளில் பழனி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து விரதத்தை முடிப்பார்கள். ஆறுமுகப் பெருமானின் அருளை அடைய தைப்பூசம் உகந்த நாள். முருகப்பெருமானின் ஆறுபடை வீடுளிலும் முருகனடியார்கள் பலர் பாதயாத்திரையாகச் சென்று தைப்பூசத்தில் முருகனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்யும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர்.
தைப்பூசத்தில் முருகனுக்கு காவடி நேர்த்திக்கடன் செலுத்துவதையும் பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். தீராத நோய்கள் ஏற்பட்டு அவதிப்படும் பட்சத்தில், முருகக் கடவுளுக்கு காவடி எடுப்பதாக வேண்டிக் கொண்டால் அவர்களைப் பீடித்துள்ள நோய் அகன்று உடல் ஆரோக்கியம் பெறுவதை எண்ணற்ற பக்தர்கள் உணர்வுப் பூர்வமாக அனுபவித்துள்ளனர். தங்களின் வேண்டுதல் நிறைவேறியதும், பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் தைப்பூச தினத்தில் காவடி நேர்ச்சையை செலுத்துகிறார்கள். முருகன் உறையும் எல்லா தலங்களிலுமே காவடி எடுக்கும் பக்தர்கள் உள்ளனர்.
தைப்பூச நன்னாளிலே நம்மை வாட்டிவதைக்கும் துன்ப, துயரங்கள் யாவும் துடைத்தெறியப்பட வேண்டும் என்று நம்மை ஆட்டுவிக்கும் மாபெரும் சக்தியான சிவசக்தியை மனதிருத்தி பிரார்த்தனை செய்வதுடன் வாழ்விலே நலங்கள் சூழ, வாழ்வு சிறக்க வாழவழி கிட்ட வேண்டும் என்று விரதமிருந்து வேண்டுதல் செய்து தொழுகிறோம். இந்தத்தினத்தில் புண்ணிய நதிகளில் நீராடுவது சிறப்பாகும். இயலாதவர்கள் புண்ணிய நதிகளை நினைத்துப் போற்றி வழிபட்டு நீராடுதல் வேண்டும். வாழ்வில் ஒளியேற்றும் தைப்பூச நன்னாள் பல நற்செயல்கள் தொடங்கும் நாளாக அமைகிறது.
தைப்பூச நாளில் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, திருநீறு, உருத்திராட்சம் அணிந்து சிவபெருமானை வழிபட வேண்டும். அன்றைய தினம் தேவாரம், திருவாசகம் போன்றவற்றைப் பாராயணம் செய்ய வேண்டும். தைப்பூச நாளில் விரதமிருந்து உணவு உண்ணாமல் 3 வேளைகளிலும் பால், பழம் சாப்பிடலாம். அல்லது அன்றைய தினம் முழுவதும் நீர் ஆகாரம் மட்டும் அருந்தி விரதமிருக்கலாம். மாலையில் கோவிலுக்குச் சென்று சிவ பூஜையில் பங்கேற்று, சிவனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். நாம் வேண்டும் அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றும் வல்லமை கொண்டது தைப்பூச விரதம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
தி.மு.க. தேர்தல் வாக்குறுதி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
25 Jan 2026சென்னை, தி.மு.க.வால் இனி ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது என்று தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, தேர்தல் வாக்குறுதிகளில் நான்கில் ஒரு பங்கை கூட தி.மு.க.
-
இன்று 77-வது குடியரசு தினம்: முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கவர்னர் இன்று கொடியேற்றுகிறாா்
25 Jan 2026சென்னை, இன்று 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கவர்னர் இன்று கொடியேற்றுகிறாா்.
-
இன்று 77-வது குடியரசு தினம்: தலைநகர் டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு
25 Jan 2026புதுடெல்லி, நாடு முழுவதும் குடியரசு தினம் இன்று கொண்டாடப்படவுள்ள நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள இந்தியா கேட் மற்றும் குடியரசுத் தலைவர் மாளிகை உள்பட நாடு முழுவதும் உச
-
மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து-நடராசனுக்கு சிலைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து மரியாதை
25 Jan 2026சென்னை, மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு தாளமுத்து - நடராசன் நினைவிடத்தில் அவர்களது திருவுருவப் படங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தின
-
டபுள் என்ஜின் எனக்கூறி ஏமாற்ற முடியாது: டெல்லியின் ஆதிக்கத்துக்கு தமிழ்நாடு தலைகுனியாது: காஞ்சிபுரத்தில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் சூளுரை
25 Jan 2026காஞ்சிபுரம், டபுள் என்ஜின் எனக்கூறி இனி தமிழக மக்களை மத்திய அரசு ஏமாற்ற முடியாது என்றும் 7-வது முறையாக தமிழகத்தில் தி.மு.க.
-
உள்துறை அமைச்சர் அமித்ஷா 28-ம் தேதி தமிழ்நாடு வருகை
25 Jan 2026சென்னை, உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 28ம் தேதி தமிழகம் வருகிறார்.
-
என்ன சூழ்ச்சி செய்தாலும் எந்த அழுத்தத்திற்கும் நான் அடங்கிப் போக மாட்டேன்: த.வெ.க. செயல் வீரர்கள் கூட்டத்தில் விஜய் பரபரப்பு பேச்சு
25 Jan 2026சென்னை, அழுத்தத்திற்கு அடங்கிப் போகும் ஆள் நான் இல்லை என்று த.வெ.க. செயல் வீரர்கள் கூட்டத்தில் விஜய் தெரிவித்துள்ளார். மேலும், ஊழல் செய்யவே மாட்டேன்.
-
வாக்காளர் பட்டியலில் பெயர்கள் சேர்க்க சிறப்பு முகாம்கள் நிறைவு
25 Jan 2026சென்னை, தமிழகம் முழுவதும் வாக்காளர்கள் சேர்க்கைக்கான சிறப்பு முகாம்கள் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், வரும் பிப்.17-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –26-01-2026
25 Jan 2026 -
வங்கதேசத்தில் பயங்கரம்: மேலும் ஒரு இந்து வாலிபர் உயிரோடு எரித்துக் கொலை
25 Jan 2026டாக்கா, வங்க தேசத்தில் மேலும் ஒரு இந்து வாலிபர் உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிப்பேன்: பிரேமலதா விஜயகாந்த் தகவல்
25 Jan 2026திருச்செந்தூர், கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிப்பேன் என்றும், தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் 2026 தேர்தல் நல்ல மாற்றத்தையும், வெற்றியையும் கொடுக்கும் என்ற
-
முத்தரப்பு பேச்சுவார்த்தையில் இழுபறி: கைப்பற்றிய பகுதிகளை திரும்பி தர ரஷ்யா மறுப்பு
25 Jan 2026அபுதாபி, அபுதாபியில் ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பான முத்தரப்பு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கும் நிலைியல் கைப்பற்றிய பகுதிகளை ரஷ்யா திரும்பி தர மறுத்துள்ளதாக
-
தமிழ் மொழியை உயிரெனக் காப்போம்: மொழிப்போர் தியாகிகளின் நினைவு நாளில் விஜய் பதிவு
25 Jan 2026சென்னை, ஒப்பற்ற நம் அன்னைத் தமிழை உயிரெனக் காப்போம் என்று மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு விஜய் தெரிவித்துள்ளார். மேலும் த.வெ.க.
-
ஓ.பன்னீ செல்வத்தின் ஆதரவாளரான கு.ப.கிருஷ்ணன் த.வெ.க.வில் இணைந்தார்
25 Jan 2026சென்னை, த.வெ.க.வில் ஓ.பி.எஸ். ஆதரவாளரான அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன் இணைந்துள்ளார்.
-
குஜராத்தில் விபத்து - 6 பேர் பலி
25 Jan 2026காந்தி நகர், குஜராத்தில் நடந்த கோர விபத்தில் 6 பேர் பலியான சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
ஜனநாயகத்தின் உணர்வை மதிக்க வேண்டும்: தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வலியுறுத்தல்
25 Jan 2026புதுடெல்லி, தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
நாட்டையே முடக்கிய கடும் பனிப்புயல்: அமெரிக்காவில் 13 ஆயிரம் விமானங்கள் சேவை ரத்து
25 Jan 2026நியூயார்க். அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு நிலவி வரும் நிலையில் இன்றும் பனிப்புயல் தாக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
ஐ.நா. தீர்மானத்துக்கு எதிராக வாக்கு: இந்தியாவுக்கு ஈரான் நன்றி
25 Jan 2026தெஹ்ரான், ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் ஒடுக்கப்படுவதற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சில் கொண்டு வந்த தீர்மானத்திற்கு எதிராக இந்தியா வாக்கள
-
எத்தனை கட்சிகள் வந்தாலும் தி.மு.க.வின் இண்டியா கூட்டணியை யாராலும் எதுவும் செய்ய முடியாது: அமைச்சர் ரகுபதி நம்பிக்கை
25 Jan 2026புதுக்கோட்டை, எத்தனை கட்சிகள் அந்த கூட்டணியில் வந்து சேர்ந்தாலும் தி.மு.க.
-
த.வெ.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் ராணி வேலுநாச்சியாரின் கதையை சொன்ன விஜய்
25 Jan 2026சென்னை, த.வெ.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் நிர்வாகிகளை ஊக்கும்விக்கும் வகையில் த.வெ.க. தலைவர் விஜய் ராணி வேலுநாச்சியார் பற்றி குட்டிக்கதை ஒன்று சொன்னார்.
-
இந்தியாவால் தேடப்படும் குற்றவாளிகள் வெளிநாடுகளில் பதுங்கி உள்ளனர்: மத்திய அரசு
25 Jan 2026புதுடெல்லி, பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய தேடப்படும் பட்டியலில் உள்ள 70 இந்தியக் குற்றவாளிகள் 2024-25 ஆண்டுகளுக்கு இடையில் வெளிநாடுகளில் இருப்பது கண்டறியப்பட்டுள
-
உள்ளூர் பொருட்களையே வாங்க வேண்டும்: கனடா மக்களுக்கு பிரதமர் கோரிக்கை
25 Jan 2026ஒட்டவோ, அதிபர் ட்ரம்ப் வரி மிரட்டல் காரணமாக கனடா பொருட்களையே வாங்க நாட்டு மக்களுக்கு பிரதமர் கார்னி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு நாளை அனைத்துக்கட்சி கூட்டம்
25 Jan 2026புதுடெல்லி, பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், நாளை (ஜன., 27ம் தேதி) அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
-
சீனாவுடன் தொடரும் உறவு: கனடாவுக்கு 100 சதவீத வரி மிரட்டல் விடுத்தார் ட்ரம்ப்
25 Jan 2026நியூயார்க், சீனாவுடன் உறவு வைத்துக் கொண்டால் கனடாவுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
-
தி.மு.க.வை வீழ்த்தக்கூடிய ஒரே சக்தி விஜய்தான்: த.வெ.க.வின் வெற்றியை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: த.வெ.க. செயல் வீரர்கள் கூட்டத்தில் செங்கோட்டையன் பேச்சு
25 Jan 2026சென்னை, தி.மு.க.வை வீழ்த்தக்கூடிய ஒரே சக்தி விஜய்தான் என்றும், த.வெ.க.வின் வெற்றியை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்றும் த.வெ.க.


