முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மலையாள சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் ஆலப்பி ரங்கநாத் மரணம்

திங்கட்கிழமை, 17 ஜனவரி 2022      சினிமா
Image Unavailable

மலையாள சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் ஆலப்பி ரங்கநாத் கொரோனாவால் மரணமடைந்தார்.

மலையாள சினிமாவின் பழம்பெரும் இசையமைப்பாளர் ஆலப்பி ரங்கநாத் (73). 1973ம் ஆண்டு ‘ஜீசஸ்’ என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதன்பின்னர் 100க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசை அமைத்து உள்ளார். சினிமா தவிர 42 நாடகங்களையும், 25 நடன நாடகங்களையும் எழுதி இயக்கி உள்ளார். இவருக்கு கடந்த 14ம் தேதி கேரள அரசின் ஹரிவராசனம் விருது சபரிமலையில் வைத்து வழங்கப்பட்டது.

அதன்பின் ஊர் திரும்பியவர், ரத்த அழுத்தம் காரணமாக கோட்டயத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 10 மணியளவில் சிகிச்சை பலனின்றி ஆலப்பி ரங்கநாத் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு கேரள திரையுலகினர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து