முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாடு சட்டப்பேரவை அக்டோபர் 14-ல் கூடுகிறது: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 23 செப்டம்பர் 2025      தமிழகம்
Appavu 2023-09-12

சென்னை, தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் அக்டோபர் 14ம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் ஜனவரி 6-ந்தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. ஆனால், இந்த கூட்டத்தில் பங்கேற்ற கவர்னர் ஆர்.என். ரவி, தனது உரையை வாசிக்காமல் சென்றுவிட்டார். தொடர்ந்து, கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் 4 நாட்கள் நடைபெற்றது.

அதன்பிறகு, மார்ச் 14-ந்தேதி சட்டசபையில் 2025-2026-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அடுத்த நாள் (மார்ச் 15) வேளாண் பட்ஜெட் தாக்கல் ஆனது. அதனை தொடர்ந்து, மார்ச் 17-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை இரு பட்ஜெட்டுகள் மீதான பொது விவாதம் நடைபெற்றது.

அதன்பின்னர், மார்ச் 24-ந்தேதி முதல் ஏப்ரல் 29-ந்தேதி வரை துறை வாரியாக மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்றது. மொத்தம் 55 துறைகள் மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்று முடிந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் சட்டசபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், 6 மாத கால இடைவெளியில் சட்டசபை மீண்டும் கூட்டப்பட வேண்டும் என்ற விதியின் அடிப்படையில், தமிழக சட்டசபை மீண்டும் கூட இருக்கிறது. அடுத்த மாதம் (அக்டோபர்) 14-ந்தேதி மழைக்கால கூட்டத்தொடராக இது நடக்கிறது. இதுதொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, "தமிழ்நாடு சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத்தொடர், அக்டோபர் 14ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்கும். அதைத் தொடர்ந்து, 2025-26 ஆம் ஆண்டுக்கான கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் சட்டமன்றத்தில் அளிக்கப்பட்டு நிறைவேற்றப்படும்.

சட்டப்பேரவை கூடுவதற்கு முன்னதாக அலுவல் ஆய்வுக்குழு கூட்டப்பட்டு, கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது முடிவு செய்யப்படும். கூட்டத்தொடரின் முதல் நாளில், மறைந்த வால்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் அமுல் கந்தசாமி உட்பட 8 பேரின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும்" என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து