முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.114.48 கோடியில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் பெருந்ததிட்ட வளாக கட்டிடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

புதன்கிழமை, 19 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று  தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 26 கோடியே 66 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகக் கட்டிடங்கள், கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் குடியிருப்பு கட்டிடங்கள் ஆகியவற்றை திறந்து வைத்தார். மேலும், 114 கோடியே 48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் பெருந்ததிட்ட வளாகக்  கட்டிடத்திற்கும் முதல்வர் அடிக்கல் நாட்டினார். 

வருவாய்த்துறையானது மாநிலத்தின் நிருவாக அமைப்புக்கு முதுகெலும்பாக விளங்குவதோடு, சாமானிய மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும் முக்கிய பங்காற்றுகிறது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, வேலூர் மாவட்டம்  குடியாத்தம், திருவாரூர் மாவட்டம்  மன்னார்குடி, இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் மற்றும் மதுரை மாவட்டம் திருமங்கலம் ஆகிய இடங்களில் 9 கோடியே 85 இலட்சத்து 81 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கோட்டாட்சியர் அலுவலகக் கட்டிடங்கள்,   

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, வேலூர் மாவட்டம் குடியாத்தம், இராணிப்பேட்டை மாவட்டம்  அரக்கோணம் மற்றும் மதுரை மாவட்டம் திருமங்கலம் ஆகிய இடங்களில் ஒரு கோடியே 48 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கோட்டாட்சியர் குடியிருப்புக் கட்டிடங்கள்,

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் மற்றும் குடியாத்தம்,  திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை மற்றும் புதுக்கோட்டை மாவட்டம்  அறந்தாங்கி மற்றும் ஆவுடையார்கோவில் ஆகிய இடங்களில் 14 கோடியே 76 லட்சத்து 91 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வட்டாட்சியர் அலுவலகக் கட்டிடங்கள்,

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை மற்றும் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஆகிய இடங்களில் 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வட்டாட்சியர் குடியிருப்பு கட்டிடங்கள்  என மொத்தம் 26 கோடியே 66 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை 16 கட்டிடங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். 

மேலும், மயிலாடுதுறையில் 114 கோடியே 48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் பெருந்திட்ட வளாகக்  கட்டிடத்திற்கு   முதல்வர் அடிக்கல் நாட்டினார். இவ்வளாகம் 6.54 ஏக்கர் நிலப்பரப்பில், 2,84,946 சதுர அடி கட்டடப் பரப்பளவில் தரை மற்றும் 7 தளங்களுடன் 63 பல்வேறு துறைகளுக்கான அலுவலகங்களை உள்ளடக்கி கட்டப்படவுள்ளது. 

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ. வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், சா.மு.நாசர், காணொலிக் காட்சி வாயிலாக அமைச்சர்கள் எஸ். இரகுபதி, அர. சக்கரபாணி, ஆர். காந்தி, பி.மூர்த்தி, சிவ.வீ. மெய்யநாதன், சட்டப்பேரவை துணைத் தலைவர் கு. பிச்சாண்டி, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த், சமூக பாதுகாப்புத் திட்ட ஆணையர்  வெங்கடாசலம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து